இஷ்ரத் இம்தியாஸ்
கடந்த 6-8 மாதங்களுக்காக இலங்கை அணி அனுபவித்த மோசமான விளையாட்டின் பின் இளம் இலங்கை சிங்கங்கள் அவுஸ்ரேலிய அணியை முதல் தடவையாக டெஸ்ட் தொடர் ஒன்றில் வெற்றி பெற்று இருக்கும் இந்த சந்தோசமான தருணத்தில் இன்று காலை இலங்கை கிரிக்கட் சபையில் செய்தியாளர் மாநாடு நடைப்பெற்றது. இந்த நிகழ்வில் இலங்கை கிரிக்கட் சபையின் ஆலோசகர் அரவிந்த டி சில்வா இந்த மாதம் கடைசியில் இருந்து இலங்கை அணியின் வேகப்பந்து ஆலோசகராக இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் சமிந்த வாஸ் செயற்படுவார் என்ற நற்செய்தியை அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அரவிந்த டி சில்வா கூறுகையில் “நான் சமிந்த வாஸோடு இது தொடர்பாக உரையாடினேன், அவரும் இந்த பொறுப்பை சரிவர நிறைவேற்ற தீவிர நடவடிக்கை எடுக்கும் நோக்கில் உள்ளார். நாம் நினைக்கிறோம் நிறைய இளம் வீரர்களை கொண்ட இலங்கை அணிக்கு சமிந்த வாஸ் பந்துவீச்சு ஆலோசகராக செயற்படுவது சிறந்த நன்றான விடயமாகும்” என்று கூறியுள்ளார்.
42 வயது நிரம்பிய சமிந்த வாஸ் இலங்கை அணியை பிரதிநுவப்படுத்தி 1994ஆம் ஆண்டு தொடக்கம் 2006ஆம் ஆண்டு வரையிலான 12 வருட காலத்தில் இலங்கை அணிக்கு பாரிய பந்துவீச்சு சேவையை செய்துள்ளதோடு இலங்கை அணியின் பல வெற்றிகளுக்கும் வித்திட்ட வீரர் ஆவார். வாஸி என்ற புனைபெயரைக் கொண்ட இவர் 111 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 355 விக்கட்டுகளையும், 322 ஒருசாள் சர்வேசப் போட்டிகளில் விளையாடி 400 விக்கட்டுகளையும்,6 டி20 போட்டிகளில் விளையாடி 6 விக்கட்டுகளையும் வீழ்த்தி உள்ளார் என்பது அவர் வேகப்பந்து வீச்சுத் துறையில் ஜாம்பவான் என்பதை எடுத்துக் காட்டுகிறது.