சீனாவில் சிறு வாகனங்கள் புகுந்து செல்லும் பிரமாண்ட பஸ் சோதனை ஓட்டம்

சீனா பல விதமான புதுமை கண்டு பிடிப்புகளை அறிமுகப்படுத்தி வருகிறது. சமீபத்தில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் வடிவமைக்கப்பட்ட அதிநவீன பஸ் ஒன்றை தயாரித்துள்ளது. ரோட்டில் சென்று கொண்டிருக்கும் கார்கள் மற்றும் சிறு வாகனங்கள் மீது இடையூறு இன்றி பயணம் செய்கிறது. 

இது 72 அடி நீளம் மற்றும் 25 அடி அகலம் உள்ளது. மின்சாரம் மூலம் இயங்கும் இந்த பஸ்சில் 1400 பேர் பயணம் செய்ய முடியும். இது மணிக்கு 60 கி.மீட்டர் வேகத்தில் இயங்க கூடியது.

இந்த பஸ் சோதனை ஓட்டம் குயின்குயாங்டோ நகரில் நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதுபோன்ற 40 பஸ்களை தயாரிக்க சீன போக்குவரத்து கழகம் தீர்மானித்துள்ளது.