பாதயாத்திரையில் ஈடுபட்டவர்கள் ஜனாதிபதியையும், பிரதமரையும் திட்டும் நடவடிக்கைகளில் மட்டுமே ஈடுபட்டனர்

எந்தவித குறிக்கோளுமற்ற நடவடிக்கையே மஹிந்த தரப்பில் மேற்கொண்ட பாதயாத்திரை உண்மையில் இது பாதயாத்திரையே அல்ல. என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐ.தே.க இன்று ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவர் இதனைத் தெரிவித்தார்.

harin fernando

 

பாதயாத்திரையில் ஈடுபட்டவர்கள் ஜனாதிபதியையும், பிரதமரையும் திட்டும் நடவடிக்கைகளில் மட்டுமே ஈடுபட்டனர் மக்களுக்கு நன்மையளிக்கும் செயற்பாடுகளுக்காக இது முன்னெடுக்கப்படவில்லை.

இதில் ஈடுபட்டவர்கள் குழந்தைகளை கையில் வைத்துக் கொண்டு அநாகரீகமான தகாத வார்த்தைகளை கோஷமிட்டிருந்தனர் இது கண்டிக்கப்படவேண்டிய விடயம். இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

மேலும், 2 மில்லியன் மக்கள் குறித்த பாதயாத்திரையில் கலந்து கொண்டனர் எனக் கூறப்படுபவை முற்றிலும் பொய்யானது. நாமல் ராஜபக்ஷ தந்தையைப் போன்று தனது அரசியல் பலத்தினைக் காட்டுவதற்காகவே பாதயாத்திரையில் ஈடுபட்டார். பாதயாத்திரையில் பலவிதமான குற்றச்செயல்கள் இடம்பெற்றுள்ளது இவைகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் கூறினார்.

இதேவேளை, நாட்டில் தற்போது 255 வைபை (wifi) வழங்கு நிலையங்கள் இலவசமாக அரசினால் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் இவை 400ஆக உயர்த்தப்படும். எனவும் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.