கடந்த அரசாங்கத்தினால் இழுத்துப் போடப்பட்ட பொருளாதார நெருக்கடியின் சுமையில் பொதுமக்கள் :ஜனாதிபதி

maithripala

மேடைகளிலும் பாதைகளிலும் விதவிதமாக பேசிச் சென்றாலும், கடந்த அரசாங்கத்தினால் நாட்டிற்குள் இழுத்துப் போடப்பட்ட பொருளாதார நெருக்கடியின் சுமையை தற்போது பொதுமக்கள் தாங்க வேண்டி இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறுகின்றார். 

இலங்கை தற்போது 9000 மில்லியன் ரூபா கடனை தாங்கி நிற்பதால், அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் அனைத்து தரப்பினரும் பொருளாதார நெருக்கடி நிலமையை புரிந்து செயற்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 

எவ்வாறாயினும் இதுபோன்ற நெருக்கடியில் இருந்தாலும் மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்களில் குறைகள் ஏற்படாது என்று அவர் கூறுகின்றார். 

நாட்டின் அபிவிருத்திக்காக அரச மற்றும் தனியார் துறையினர் ஒன்றிணைந்து புதிய பயணத்தை ஆரம்பிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறினார். 

கொழும்பில் இடம்பெற்ற பொருளாதார மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.