உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று பிரச்சாரத்தை துவக்கிய சோனியா காந்தி, திடீர் உடல் நலக்குறைவால் தனது பயணத்தை பாதியில் ரத்து செய்தார். உடல் நலக்குறைவு ஏற்பட்டதும் டெல்லி விமானம் மூலம் சோனியா காந்தி திரும்ப திட்டமிட்டார். ஆனால், வாரணாசி விமான நிலையத்திலேயே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதால், அவர் புறப்படும் விமானம் தாமதமாக புறப்பட்டது.
இதற்கிடையே, உடல் நலக்குறைவால் பயணத்தை ரத்து செய்ய நேர்ந்தது வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளார்.
உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ள சோனியா காந்தி விரைவில் குணமடைந்து, ஆரோக்கியமான உடல் நிலையை பெற பிராத்திப்பதாக பிரதமர் மோடி டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.