வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் டெஸ்டில் இந்திய அணி, இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் கிங்ஸ்டனில் நடக்கிறது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜேசன் ஹோல்டர் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் கம்மின்ஸ் அறிமுக வீரராக களமிறங்கினார்.
முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிராத் வெயிட் (1), சந்திரிகா (5) டேரன் பிராவோ(0) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பிளாக்வுட் (62) அரைசதம் அடித்து அவுட்டானார். பின்கள வரிசை வீரர்கள் அஷ்வின் சுழலில் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி, முதல் இன்னிங்சில், 196 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்திய அணி சார்பில் அஷ்வின் அதிகபட்சமாக 5 விக்கெட் கைப்பற்றினார். இஷாந்த், ஷமி தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.