கடந்த கால ஆட்சியின் போது நாட்டில் இடம் பெற்ற ஊழல்கள் மற்றும் மோசடி தொடர்பான பட்டியலை முதலமைச்சர் இசுறு தேவபிரிய வெளியிட்டார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
மஹிந்த ராஜபக்க்ஷ ஆட்சியில் இருக்கும் போது, தன் குடும்ப நலன்களை கருத்திற் கொண்டு மாத்திரம் செயற்பட்டதாகவும் மக்களுடைய வறுமை தெரியாமல் இருந்ததாகவும் கூறினார்.
இதன்போது யுத்த காலத்தில் பிரபாகரன் எவ்வாறு தன்னுடைய பாதுகாப்பிற்கு மக்களை அரனாக பயன் படுத்தினாரே அது போன்றுதான் மஹிந்த தன்னுடைய குடும்ப ஊழல் தொடர்பாக குற்றங்களை மறைப்பதற்கு மக்களை கொண்டு பாதயாத்திரை நடத்துவதாக இசுறு தேவபிரிய கூறினார்.
கடந்த ஆட்சியின் போது பாரத லக்க்ஷமன் கொலை, ஊடகவியலாளர் லசந்த மற்றும் பிரகீத் எக்னலி கொட கொலை, பொருளாதார அமைச்சின் மூலம் பல கோடி ரூபாய்கள் கொள்ளை, அபிவிருத்தி லொத்தர் சபையின் பண மோசடி, இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனத்தில் இடம் பெற்ற ஊழல் போன்றவற்றை இதன்போது சுட்டிக்காட்டினார்.
மேலும், நாமல் ராஜபக்க்ஷ பல மில்லியன் ரூபாக்களை தனது செகுசு வாழ்விற்கு பயன் படுத்தினார் எனவும் பல அமைச்சுகளில் இடம்பெற்ற ஊழல்களுக்கு ராஜபக்க்ஷ குடும்பத்தினர்தான் காரணம் எனவும் குறிப்பிட்டார்.
இதேவேளை, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பிளவிற்கு மிக முக்கிய காரணம் புத்தி சுவாதினமற்ற ராஜபக்சர்களே என மேல் மாகான முதலமைச்சர் இசுறு தேவபிரிய இதன்போது சுட்டிக்காட்டினார்.