ஹிலாரியை விட அதிபர் பதவிக்கு தகுதியானவர் யாரும் இல்லை: ஒபாமா

Cassidy-Why-Is-Obama-Embracing-Hillary-Clinton-1200அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவாக தற்போதைய அதிபர் ஒபாமா பிலடெல்பியா பகுதியில் பிரசாரம் செய்தார். 

அப்போது பேசிய அவர், ஹிலாரி தான் உங்களின் அடுத்த அதிபர். அவரை விட அதிபர் பதவிக்கு தகுதியானவர் யாரும் இல்லை. 

டிரம்பிடம் எதிர்கால திட்டங்கள் ஏதும் இல்லை. 

அமெரிக்கா ஏற்கனவே சிறந்த நாடு. நீங்கள் விரும்பினால் ஜனநாயகத்தை இங்கு கொண்டு வரலாம். 

டிரம்ப் இதுவரை எந்த பிரச்சினைக்கும் தீர்வு காணவில்லை. அவர் பயத்தை மட்டுமே தந்துள்ளார். 

அவர் நமது இராணுவத்தை பேரழிவு என்றும், அமெரிக்காவை பலவீனமான நாடு என்றுமே கூறி வருகிறார். 

அதிபர் போட்டியில் இருந்து ஹிலாரி விலக மாட்டார். 

அமெரிக்காவில் சிறப்பு டிரம்ப்பை சார்ந்து இல்லை. அவரை மட்டுமல்ல வேறு எவரை சார்ந்தும் இல்லை. 

ஒசாமா பின் லேடனை கொல்வதற்கான ஆலோசனை நடந்த போது ஹிலாரி என்னுடனேயே இருந்து நமது திட்டத்திற்கு ஆதரவாக பேசி ஒசாமாவை கொல்லும் திட்டத்தை வகுக்க உறுதுணையாக இருந்தார் என ஒபாமா தெரிவித்தார்.

ஹிலாரி வெள்ளை மாளிகைக்கு செல்ல அனைவரும் வாக்களிக்க அவர் கேட்டுக் கொண்டார். 

மேலும் பேசிய அவர் மக்களுக்கு உரிய மதிப்பளிக்கும் தன்மை கொண்டவர் ஹிலாரி கிளிண்டன் என்றார். 

மேலும் அவர் ஒருபோதும் தமது கொள்கையில் இருந்து பின்வாங்கியதில்லை என குறிப்பிட்டார். 

அதுவே ஹிலாரி கிளிண்டன் என்ற ஒபாமா அவரை வீழ்த்த நினைப்பவர்களை பற்றி கவலை இல்லையென்றார்.

என்னை விடவும், பில் கிளிண்டனை விடவும், மற்ற ஆண், பெண்களை விடவும் அமெரிக்க அதிபராகி சேவையாற்றும் தகுதி படைத்தவர் ஹிலாரி என புகழாரம் சூட்டினார்.