இலங்கை மீண்டும் ஈரா­னிடம் இருந்து மசகு எண்­ணெயை பெற்றுக் கொள்ள திட்டம் !

Flag-Pins-Iran-Sri-Lankaஈரா­னிடம் இருந்து மீண்டும் மசகு எண்­ணெயை இறக்­கு­மதி செய்ய இலங்கை அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது. 

அந்த நாட்டின் மீது விதிக்­கப்­பட்­டி­ருந்த பொரு­ளா­தாரத் தடைகள் நீக்­கப்­ப­டு­வ­தோடு, எண்ணெய் இறக்­கு­மதி நட­வ­டிக்­கையை மேற்­கொள்ளத் தீர்­மா­னித்­துள்­ள­தாக தெரி­ய­வந்­துள்­ளது. 

இந்த விடயம் குறித்து ஈரான் அமைச்­ச­ருடன் இலங்­கையின் பெற்­றோ­லிய வள அமைச்சர் சந்­திம வீரக்­கொடி நேற்­று­முன்­தினம் விஷேட கலந்­து­ரை­யாடல் ஒன்றை மேற்­கொண்டார். 

2012 ஆம் ஆண்டு முதல் ஈரா­னுக்கு பொரு­ளா­தாரத் தடைகள் விதிக்­கப்­பட்­ட­மையால் இலங்கை அர­சாங்கம் அந்த நாட்­டிடம் இருந்து மசகு எண்­ணெயை கொள்வனவு செய்வதை நிறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.