ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுக்க விதிகளை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கட்சிக்கோ அல்லது கட்சியின் ஒழுக்க விதிகளுக்கோ எவரேனும் குந்தகம் ஏற்படுத்த முயற்சித்தால் அவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் இரவு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்களுடன் நடத்திய சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியின் சிலர் தம்மையும் அமைச்சரவையையும் விமர்சனம் செய்து வருவதாகத் தெரிவித்துள்ள அவர், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் அரசாங்கத்திற்கும் எதிராக பாத யாத்திரை நடாத்த எவ்வித தடையும் விதிக்கப்படாது என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்தும் நடவடிக்கைகளை அனுமதிக்க முடியாது எனக் கூறிய அவர், யுத்தக் குற்றச் செயல் விசாரணைகளின் போது வெளிநாட்டு நீதவான்களின் பங்களிப்புக்கு இடமளிக்கப்படாது எனக் கூறிய அவர், கட்சியில் இருந்து எவரையும் நீக்கும் திட்டம் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.