பாராளுமன்றில் தயாரிக்கப்படும் உணவுகள் விசத் தன்மையான பாம் எண்ணெய் மூலம் தயாராவதாக நுகர்வோர் உரிமைகள் பர்துகாக்கும் தேசிய அமைப்பு தெரிவித்துள்ளது.
அத்துடன் நாடு பூராகவும் பல ஹோட்டல்கள் மற்றும் உயர் இடங்களில் குறித்த பாம் எண்ணெயை பயன்படுத்தப்படுவதாகவும் இந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் போலி வியாபாரிகள் தமது வர்த்தகத்தை அதிகரித்துக்கொள்வதற்காக பாம் எண்ணெயுடன் பல நச்சுப்பொருட்களை கலந்து விற்பதாகவும்,
தமது அமைப்பு ஆராய்ந்து பார்த்ததில் பாராளுமன்றத்திலும் குறித்த எண்ணெய்யை பயன்படுத்தப்படுவதாக நுகர்வோர் உரிமை பாதுகாப்பு அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே இது தொடர்பில் சபாநாயகருக்கும் கடிதம் அனுப்பியுள்ளதாகவும்,பொதுமக்களின் சுகாதாரம் தொடர்பில் கரிசனைக் காட்டி குறித்த எண்ணெய் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.