புதிய தேர்தல் முறை­மையில் பிர­தே­சத்­துக்கோ இனத்­துக்கோ அநீதி ஏற்­ப­டாது!

susilசிறி­லங்கா சுதந்­திர கட்சி முன்­மொ­ழிந்­துள்ள புதிய தேர்தல் முறை­மையில் எந்­த­வொரு பிர­தே­சத்­திற்கோ அல்­லது இனத்­துக்கோ அநீதி ஏற்­ப­டாது. தற்­போ­துள்ள தேர்தல் முறையில் புத்தி ஜீவி­களை விட பணம் படைத்­த­வர்­களே தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டு­கின்­றனர் என முன்னாள் அமைச்­சரும் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் தேசிய அமைப்­பா­ள­ரு­மான சுசில் பிரே­ம்­ஜ­யந்த தெரி­வித்தார்.

 

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்­ன­ணியின் சம்­மே­ளனம் ஏற்­பாடு செய்­தி­ருந்த ஸ்தாபகர் தி நிகழ்வு கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பு தபால் நிலைய தலை­மைக்­கா­ரி­யா­லய கேட்போர் கூடத்தில் இடம்­பெற்­றது. நிகழ்வில் பிர­தம பேச்­சா­ள­ராக கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

நாட்டில் தற்­போது புதிய தேர்தல் முறைமை பற்றி அதி­க­மாக பேசப்­பட்டு வரு­கின்­றது. புதிய தேர்தல் முறை­யொன்றின் அவ­சியம் குறித்து சுதந்­தி­ரக்­கட்­சியே ஆரம்­ப­மாக பிரே­ர­ணை­யொன்றை கொண்டு வந்­தது.

மூவின மக்கள் வாழக்­கூ­டிய இந்த நாட்டில் 1978 ஆம் ஆண்டு முதல் விகி­தா­சார தேர்தல் முறை­யி­லேயே பாரா­ளு­மன்­றத்­துக்கு மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டு­கின்­றனர்.
கடந்த 30 வரு­டங்­க­ளாக இந்த நாட்டில் நடை­பெற்ற யுத்தம் கார­ண­மாக மக்கள் தங்­க­ளது சொந்த இடங்­களை விட்டு நாட்டின் பல பிர­தே­சங்­க­ளிலும் இடம்­பெ­யர்ந்து வாழ்­கின்­றனர். இதனால் சில தேர்தல் தொகு­தி­களில் மக்கள் தொகை குறை­வாக காணப்­ப­டு­கின்­றது. இதன் கார­ண­மாக தற்­போ­தைய தேர்தல் முறையில் இந்த பிர­தே­சங்­களில் இருந்து மக்கள் பிர­தி­நி­திகள் தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டாமல் போகும் நிலை உரு­வா­கி­யுள்­ளது.

உதா­ர­ண­மாக கொழும்பு மாவட்­டத்தில் கோட்டே தேர்தல் தொகு­தி­யி­லி­ருந்து 1977ஆம் ஆண்டு ஆனந்த திஸ்ஸ டி அல்­வி­சுக்கு பிறகு இது­வரை எவரும் பாரா­ளு­மன்­றத்­துக்கு தெரிவு செய்­யப்­ப­ட­வில்லை.

இவ்­வாறு பல பிர­தே­சங்கள் இருக்­கின்­றன. ஒவ்­வொரு தேர்தல் தொகு­தி­யி­லி­ருந்தும் பொறுப்­புக்­கூ­றக்­கூ­டிய மக்கள் பிரதிநிதி­யொ­ருவர் பாரா­ளு­மன்­றத்­துக்கு தெரிவு செய்­யப்­பட வேண்டும் என்ற நிலைப்­பாடு மக்கள் மத்­தி­யிலும் தற்­போது உரு­வா­கி­யுள்­ளது.

அதே­போன்று விருப்பு வாக்­குகள் கார­ண­மாக தேர்தல் காலங்­களில் கட்சி வேட்­பா­ளர்­க­ளுக்­கி­டையே முரண்­பா­டுகள் எழு­கின்­றன. அத்­துடன் புத்திஜீவிகள் சமூக சேவை­யா­ளர்கள் தேர்­தலில் போட்­டி­யிட்­டாலும் அவர்­க­ளிடம் பணம் இல்லாவிட்டால் அவர்­களால் வெற்றி பெறு­வது கடி­ன­மான காரி­ய­மாகும்.

ஆனால் புதிய தேர்தல் முறையில் விகி­தா­சார ரீதி­யா­கவும் தொகுதி வாரி­யா­கவும் மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.எனவே சிறிலங்கா சுதந்திரக்கட்சி காலத்தின் தேவையை கருத்தில் கொண்டு முன்மொழிந்துள்ள புதிய தேர்தல் முறைமையில் எந்த பிரதேசத்துக்கோ அல்லது இனத்துக்கோ பாதிப்பு ஏற்படாது என்றார்.