சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் இன்று காலை நடந்தது. இந்தக் கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி மோடி அரசை கடுமையாக தாக்கி பேசினார்.
அவர் பேசியதாவது:-
ஜனநாயக அமைப்புகளை ஒடுக்க மத்திய அரசு நினைக்கிறது தாழ்த்தப்பட்ட இன மக்களின் உரிமையை அரசு பறிக்கிறது. தாழ்த்தப்பட்ட இன மக்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல் சம்பவம் அனைவரையும் வெட்கப்பட வைக்கிறது.
குஜராத்தில் தலித் இளைஞர்கள் தாக்கப்பட்ட விவகாரம் குறித்த பிரச்சினையை பாராளுமன்றத்தில் கிளப்புவோம்.
சமீப காலமாக காஷ்மீரில் நடந்து வரும் பிரச்சினைகள் நாட்டுக்கு சவாலாக அமைந்துள்ளது. பயங்கரவாதிகள் அவர்களது குடும்பத்தினருடன் வெளியேற்றப்பட வேண்டும். காஷ்மீர் கலவரம் நாட்டுக்கு மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது.
உத்தரகாண்ட், அருணாச்சல பிரதேச விவகாரம் இந்த அரசு அரசியல் அமைப்பு சட்டத்தை நசுக்கி விட்டது. இந்த அரசு ஜனநாயகத்துக்கு விரோதமான செயல்களை செய்து வருகிறது.
காஷ்மீர் விவகாரம், பண வீக்கம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்.
இவ்வாறு சோனியா கூறியுள்ளார்.
காங்கிரஸ் எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் விவேகத்துடனும், ஆக்ரோஷத்துடனும் நடந்து கொள்ள வேண்டும் என்றும் சோனியா உத்தரவிட்டார்.