பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்குவது குறித்து இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை!

lead-eu-sri-lanka

பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்குவது குறித்து இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
வடக்கு கிழக்கில் இயல்பு நிலைமையை ஏற்படுத்துதல், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்தல், காணிகளை பொதுமக்களிடம் ஒப்படைத்தல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
நிலைமாறு நீதிப் பொறிமுறைமை உருவாக்கம், நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் மற்றும் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் போன்ற விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளன.
புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் இதன் போது இலங்கை அரசாங்கப் பிரதிநிதிகள், ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்கு விளக்கம் அளித்துள்ளனர்.
இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சித்ராங்கனி வாகீஸ்வரா உள்ளிட்ட பிரதிநிதிகள் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.