ஆரிப் சம்சுதீன் இடைநிறுத்தம்; தலைமைத்துவம் பொறுமையாகவே இருக்கும் : SM சபீஸ்

 
safees aarif
தேசிய காங்கிரசின் தலைமைத்துவம் பதவிகளுக்காக அலைந்த வரலாறுகளை நாங்களும் எங்களது  மக்களும் ஒருபோதும் கண்ட வரலாறுகள்  கிடையாது 
கடலில் மூழ்கி முத்தெடுத்தவர்களுக்கு மழை ஒரு பொருட்டல்ல ஆனால் புதிதாக மழைத்தூறலில் நனைந்தவர்களுக்கு மழை மலையாக  இருக்கும் என்பதனை  எங்கள் மக்கள் நன்கு அறிவர் 
காலடியில் பதவிகள் வந்து குவிந்தும் கண்டுகொள்ளாத தலைமைத்துவம் அரசியல் சனாக்கியம், அரசியல் அதிகாரம் என்றால்   என்ன என்பதனை அன்று அரசியல் அதிகாரத்தில் இருக்கும்போது செய்துகாட்டியது. இன்று  ஆரிப் சம்சுதீணின் மாகாணசபை உறுப்புரிமை பறிப்பின் மூலம் நிருபித்துக்காட்டியுள்ளது  இது தனக்கு பதவி கிடைத்துவிட்டால் அதிகாரம் கிடைத்துவிட்டது என என்னும் அற்பர்களுக்கும்  பதவிகளால் தங்களை அலங்கரித்துக்கொண்டு மக்களுக்கு சேவைகள் செய்யாமல் சுகபோகங்களை அனுபவித்து கொண்டிருக்கின்ற  அறிவில் கூடிய அரசியல்வாதிகளுக்கும்  ……………….ஆகும்  
ஆரிப் சம்சுதீன் ரஷ்யாவின் இரும்புமனிதன் என்று அழைக்கப்படும் ஸ்டாலின் கூறியுள்ள வாசகமான  “40 வயதுக்கு மேற்பட்டவர்கள் அரசியலில் நுழைவார்கள் என்றால் அது  பணம், பொருள், அல்லது புகளுக்காகவே இணைந்து கொள்கின்றனர்”  என்று சொன்னதை உறுதிப்படுத்திக்கொண்டார் 
ஒருவேளை சம்சுடீனை இணைத்துக்கொண்டது எங்களது தவறாகக்கூட இருக்கலாம் அத்தவறு இனி நடைபெறாமல் திருத்திக்கொள்ளப்படும்  
 சம்சுடீனை நமது சகோதரர்கள்  பல அடைமொழிகளில் விமர்சனம் செய்து எழுதபட்ட செய்திகளை காணக்கிடைத்தது அது எமது தாய் தந்தைகளின் பிரார்தனைகளினாலும், இளைஞ்சர்களின் தியாகத்தினாலும் தலைமைத்துவத்துக்கு கட்டுப்பட்டு முகம்தெரியாத தனது ஊரில் சுமார் 300வாக்குகலேனும் இல்லாத  ஒருநபருக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்தவர் நமது கட்சிக்கும்  எமக்கும் துரோகம் இளைத்துவிட்டார் என்ற ஆதங்கத்தில் வெளிப்பட்டவையாக இருக்கலாம்.  
தேசிய காங்கிரசின் தலைமைத்துவமும் போராளிகளும் அரசியல் அதிகாரம் இல்லாத ஊர்களுக்கு தனது மடியில் எல்லாவற்றையும் கட்டிக்கொண்டிராமல் அரசியல் பிரதிநிதித்துவம் கொடுத்து அலங்கரித்தவர்கள், சிறு துரும்பு கிடைத்தாலும் அதன்மூலம் எவ்வாறு மக்களுக்கு சேவை செய்யமுடியும் என்பதற்கு முன்னுதாரணமாக திகழ்ந்தவர்கள் 
 அதனால் சம்சுதீனின் செயற்பாடுகளை  நாங்கள் அவரது மனச்சாட்சியிடமே விட்டு   விட்டோம் இறைவன் பார்த்துக்கொள்ளட்டும் நீங்களும் விட்டுவிடுங்கள்.
 
பலதசாப்பதங்கள் அதிகாரத்திலிருந்து மக்களுக்கு சேவை செய்துகாட்டிய தலைமைத்துவம் பதவிகள் காலடிக்கு தேடிவந்தபோதும் பார்வையாளராக பொறுமையாக இருக்கவே ஆசைப்படுகின்றார் காரணம் மக்கள் தற்போதுள்ள தலைவர்களை புரிந்துகொள்வதற்கும் காலவகாசம் வழங்கவேண்டும் அல்லவா?