தெனியாய பிரதேச மக்களின் நலன் கருதி துருக்கி அரசின் நிதியுதவியில் மருத்துவமனையொன்று நிர்மாணிக்கப்படவுள்ளது.
குறித்த மருத்துவமனை நிர்மாணிக்கப்படவுள்ள இடத்தை சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க மற்றும் துருக்கி நாட்டின் தூதுவர் துன்கா ஒசுசதர் ஆகியோர் பார்வையிட்டுள்ளனர்.
தெனியாய பிரதேசத்தின் தியதாவ பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள குறித்த மருத்துவமனைக்கான செலவு முழுவதையும் துருக்கி அரசாங்கம் நன்கொடையாக வழங்கவுள்ளது.
இந்நிலையில், குறித்த பிரதேசத்தில் வாழும் தோட்டத் தொழிலாளர்கள் இம்மருத்துவமனை மூலம் பெரும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.