கனடாவின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஸ்ரீபன் டியோன் இந்த மாத இறுதியில், இலங்கை வரவுள்ளார்.
இது கனேடிய வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஒருவர் 13 வருடங்களுக்கு பின்னர் வருகை தரும் முதல் சந்தர்ப்பமாக அமைகிறது.
இலங்கை வரும் கனேடிய வெளிவிவகாரத்துறை அமைச்சர், மூன்று நாட்கள் இலங்கையில் தங்கியிருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, அவர் அமைச்சர் மங்கள சமரவீர, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை சந்திக்கவுள்ளார்.
இந்த வியத்தின் போது யாழ்ப்பாணத்திற்கு செல்லும் அவர், முதலமைச்சர் விக்னேஷ்வரன், வட மாகாண ஆளுனர் மற்றும் குடியியல் சமூக பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளார்.
கனேடிய வெளிவிவகாரத்துறை அமைச்சரின் இந்த விஜயம், வடக்கின் பால் உற்பத்தி மற்றும் விவசாய கைத்தொழிலுக்கு உதவுதல் மற்றும் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு உதவுதல் என்ற அடிப்படையில் இடம்பெறுகின்றது.