பிரபல நட்சத்திரங்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட மாட்டார்கள் : ஜனாதிபதி ஆலோசனை

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடாக போட்டியிட முன்வந்துள்ள வேட்பாளர்கள் சம்பந்தமாக மற்றைய தேர்தல்களில் அமுல்படுத்தப்படாத தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

President-Maithripala-Sirisena5

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்களாக நடிகர், நடிகைகள் உட்பட பிரபலமானவர்கள் நிறுத்தப்பட மாட்டார்கள் என அந்த கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பிரபல நட்சத்திரங்களை வேட்பாளர்களாக நிறுத்துவதற்கு பதிலாக மக்களுக்கு நெருக்கமான புத்திசாலிகளை தெரிவு செய்யுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மனைவிமார், புதல்வர்கள், புதல்விகள், ஆதரவாளர்களை மாத்திரம் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் முன்னர் நிறுத்தப்பட்டு வந்தனர். எனினும் இவ்வாறு இருந்து வந்த சம்பிரதாயத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முற்றாக மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.