க.கிஷாந்தன்
மக்களின் சிரமங்களை போக்கி அவர்களுக்கு அசௌகரியம் இல்லாத வகையில் மக்கள் சந்திப்பு நடத்தப்பட வேண்டும். அந்த வகையில் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்கள் பங்குபற்றும் விசேட மக்கள் சந்திப்பொன்று ஹட்டன் நகர சபை மண்டபத்தில் 11.07.2016 அன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றது.
இதில் பெருந்திரளான மக்கள் தமது குறைகள் தொடர்பில் அமைச்சரை நேரில் சந்தித்து தெளிப்படுத்தினர். இதன்போது அமைச்சர் அதிகாரிகளுக்கு பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் ஆலோசனைகள் அடங்கிய உரிய அதிகாரிகளுக்கு பணிப்பு விடுத்தார்.
அதன்படி அமைச்சரின் பணிப்பில் எதிர்வரும் நாட்களில் விசேட மக்கள் சந்திப்புக்கள் பிரதேச, மாவட்ட அடிப்படையில் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.
11.07.2016 அன்று ஹட்டனில் நடைபெற்ற விசேட மக்கள் சந்திப்பில் அட்டன் பிரதேசத்தை அண்டிய மக்கள் தங்களது பிரச்சினைகளை அமைச்சரிடம் முன்வைத்தமை குறிப்படதக்கது.