மட்டு நகரில் உள்ளூர் விமானப் போக்குவரத்துச் சேவையை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி

அபு அலா, சப்னி 
1111_Fotor
 மட்டக்களப்பு விமான நிலையத்தில் உள்ளூர் விமானப் போக்குவரத்துச் சேவையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (10) ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்துவைத்தார்.
இந்நிலையில், 02 விமான சேவைகள் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலைக்கும் கொழும்புக்கும் இடையில் தினமும் நடைபெறும்.
விமான நிலையப் புனரமைப்பு மற்றும் உள்ளூர் விமான போக்குவரத்துச் சேவைக்காக 317 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
5555_Fotor
இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன, கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸிர், இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், பிரதியமைச்சர் எம்.எஸ்.அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர், கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்னான்டோ உள்ளிட்ட பலர் இந்கநிகழ்வில் கலந்துகொண்டனர்.