சீன – இலங்கை உறவுகளினால் வேறும் எந்தவொரு நாட்டுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை என சீன வெளிவிவகார அமைச்சர் வான்க் யீ தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சீன வெளிவிவகார அமைச்சர், இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்த போது இதனைத் தெரிவித்துள்ளார்.
சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில் வரலாற்று ரீதியான உறவு காணப்படுவதாகவும் இலங்கைக்கு சகல வழிகளிலும் உதவிகளை வழங்கத் தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.