கட்சியை இரண்டாக உடைத்து வேறு கட்சி ஒன்றை அமைக்கும் மஹிந்த ராஜபக்சவால் மீண்டும் ஜனாதிபதியாக முடியாதென்று சமூகநல அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கதெரிவித்துள்ளார்.
புதிய கட்சி உருவாக்கத்தினால் கட்சி மற்றும் ஆதரவாளர்களே நெருக்கடிக்குஉள்ளாவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் குறித்த சதித் திட்டங்கள் யாருடைய நன்மைக்காக நடைபெறுகின்றது எனத் தெரியாமல்உள்ளதாகவும், கட்சியை இரண்டாக பிளவு படுத்துவதன் மூலம் கட்சியும்,கட்சிஆதரவாளர்களும் நிர்க்கதிக்குள்ளாவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகசந்திப்பிலே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எனவே கட்சியை கூறுபோடாமல் கட்சி ஆதரவாளர்கள் இது தொடர்பில் புரிந்து கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் என்றும் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.