நாட்டின் நிதி நிலைமையை ஸ்திரப்படுத்துவதே மத்திய வங்கியின் பிரதான இலக்காகும் என மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.
பாரிய பொருளாதாரத்தையும், நிதி நிலைமையையும் ஸ்திரப்படுத்துவதே மத்திய வங்கியின் முதன்மை நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார். மத்திய வங்கியின் ஆளுனராக பதவி ஏற்றுக்கொண்டதன் பின்னர் ஆற்றிய முதலாவது உரையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.தாம் மத்திய வங்கியில் இணைந்து கொண்ட 1970களில், மத்திய வங்கி தொடர்பில் பாரிய வரவேற்பு காணப்பட்டது என அவர் குறிப்பிட்டு;ள்ளார்.
மத்திய வங்கியின் நம்பிக்கையை கட்டியெழுப்ப அனைத்து பணியாளர்களினதும் ஒத்துழைப்பு அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார். சுதந்திரத்தின் பின்னர் பொருளாதாரத்தில் அரசியல் கொள்கைகளின் தலையீடு அதிகளில் காணப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
நல்ல பொருளாதாரம் அரசியிலுக்கு நன்மையானது என்பது குறித்து அரசியல்வாதிகள் மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டியது மத்திய வங்கியின் நோக்கமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் எதிர்காலத் திட்டம் பற்றி பிரதமர் விளக்கியதாகவும் எவ்வித அச்சமும் இன்றி சுயாதீனமாக தீர்மானங்கைள எடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.