1.5 வினாடிகளில் 100 கி.மீ. வேகத்தில் பறக்கும் எலக்ட்ரிக் பந்தயக் கார் சுவிட்சர்லாந்து மாணவர்களால் கண்டுபிடிப்பு !

சுவிட்சர்லாந்தில் உள்ள இ.டி.எச். ஷுரிச் மற்றும் லுசர்ன் பல்கலைக்கழகத்தின் என்ஜினீயரிங் மாணவர்கள் அதிநவீன எலக்ட்ரிக் பந்தயக் கார் தயாரித்துள்ளனர்.

201606271501306576_100-km-Electric-sports-car-to-fly-at-speeds-of-students-in_SECVPF

அந்த கார் 1.513 வினாடிகளில் 100 கி.மீ. வேகத்தில் 30 மீட்டர் தூரம் ஓடியது. கடந்த ஆண்டு ஜெர்மனியின் ஸ்டட்கார்ட் பல்கலைக் கழக மாணவர்கள் 1.779 வினாடிகளில் 100 கி.மீ. வேகத்தில் இயக்கினர்.

இந்த சாதனையை தற்போது சுவிட்சர்லாந்து என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் முறியடித்தனர். ஷுரிச் அருகே உள்ள குபெசன்டார்ப் விமானப் படை தளத்தில் உள்ள ஓட்டப்பந்தய மைதானத்தில் இச்சாதனையை படைத்தனர்.

சாதனை படைத்த இக்காரை 30 மாணவர்கள் தயாரித்தனர். சர்வதேச அளவில் என்ஜினீயரிங் மாணவர்களுக்கான பார்முலா கார் பந்தயத்தில் பங்கேற்க இக்கார் உருவாக்கப்பட்டது.