மர்ஹூம் எம்.எ.எம். அஷ்ரப் நினைவாக நட்பிட்டிமுனையில் கல்முனை மாநகர சபையினால் மைதானம் நிர்மாணிக்கப் படுகின்றது.
இந்த மைதானத்தின் பெரும் பகுதி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பங்களிப்பே . தலைவர் அஷ்ரப், பேரியல் அஷ்ரப் ,அதாவுல்லா ,ஹரீஸ் போன்றவர்களின் ஒதுக்கீடுகள் மூலம் முடியுமான அபிவிருத்தி செய்யப்படடன .
இருந்தும் மைதானத்துக்கான காணி வயல்வெளி என்பதால் அதனை மண் போட்டு நிரப்பும் பணி முக்கியமானதாகும் . கல்முனை மாநகர சபைக்கு குப்பை கொட்டிட இடம் இல்லாமல் இருந்த போது நட்பிட்டிமுனை மாநகர சபை உறுப்பினர்கள்(மூன்று கட்சி) மூவரின் அனுமதியுடன் மாநகர முதல்வர் மைதானத்தை குப்பைகளால் நிரப்பி மண் போடுவதற்கான இணக்கத்தையும் வழங்கி அதன்படி நடை பெறுகின்றது. மாநகர சபை பணம் செலவு செய்யப் படுகின்றது. கல்முனை மாநகர சபை செய்வதால் அந்தப் பெருமை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினருக்கே யார் பெருமை பெற்றாலும் நட்பிட்டிமுனையில் உள்ள இளையவர்களுக்குத் தேவை விளையாட மைதானமே.
மைதானத்தின் அபிவிருத்திக்கு கல்முனை மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பரின் ஒத்துழைப்பு அளப்பரியது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை அதற்கு துணையாக நின்றவர்கள் எமது மாநகர சபை உறுப்பினர்கள் என்பதில் மாற்றுக கருத்தும் இல்லை .
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மாநகர சபைக்கோ, மாகாண சபைக்கோ பாராளுமன்றத்துக்கோ போட்டியிட்டவர்களை நட்பிட்டிமுனையில் உள்ளவர்கள் ஆதரித்து அவர்களின் வெற்றிக்காக பாடு படடவர்கள் . வெற்றி பெற்றவர்கள் இந்தக் கிராமத்தின் அபிவிருத்தியில் கரிசனை காட்டுவதும் அவர்களுக்கான தலையாய கடமை.
மைதானத்தின் அபிவிருத்தி குப்பையால் நிரப்பிவிட்டு மண்ணை மட்டும் மேலோட்டமாக போட்டுவிட் டால் நிறைவு பெற்று விட முடியாது. மைதானத்துக்கு மண்போடுவதற்காக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் 30 இலட்சம் நிதி ஒதுக்கியுள்ளார் . ஆனால் அந்தப் பணத்துக்கு மண் போட வேண்டாம் என மாநகர முதல்வர் உட்பட உறுப்பினர்கள் தெரிவிப்பதாக கூறப் படுகின்றது.
மைதானம் நிர்மாணிக்கப் பட்டு விட்டால் இதுவரை மண் போட்ட முதல்வரின் பெயர் மறைக்கப் பட்டு 30 இலட்சம் பணம் கொடுத்த ஹரீஸ் பெயர் வந்து விடும் என்பதற்காக தடுக்கப் படுவதாக கூறப் படுகிறது . இதனால் ஹரீஸ் ஒதுக்கிய பணம் 30 லட்சம் தேக்க நிலையில் இருந்து திரும்பவுள்ளதாக அறிய முடிகிறது.
ஒரே கட்சியை சார்ந்தவர்களுக்குள் இவ்வாறான பிரச்சினை இருப்பதால் மைதான அபிவிருத்தி இழுத்தடிக்கப் பட்டுவிடும் போல் தெரிகிறது. சம்பந்தப் பட்ட மாநகர முதல்வரையும் ,பிரதி அமைச்சரையும் அவர்களின் தலைவர் ஹக்கீம் அழைத்து இதற்கான தீர்வை பெற்று தரலாம் அல்லவா? இதனை கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினரும் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் இணைப்பாளருமான யூ.எல்.தௌபீக் முன்னின்று செய்யலாம் அல்லவா? இது முடியாதென்றால் நட்பிட்டிமுனை அஸ்ரப் மைதானத்தை அபிவிருத்தி செய்ய ஹக்கீமுக்கு விருப்பமில்லையா