வடகொரியா நடத்திய ஒரு ஏவுகணை சோதனை வெற்றி

கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள முக்கிய நாடு வடகொரியா. அந்நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து  வருகிறது. எனினும் கடந்த 2006-ம் ஆண்டு முதல் உலக நாடுகள் எச்சரிக்கையையும் மீறி தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது.

வடகொரியா நேற்று மீண்டும் அடுத்தடுத்து இரண்டு  ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது. இதில் ஒன்று தோல்வியடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் ஒரு ஏவுகணை சோதனை வெற்றி அடைந்துள்ளதாக அந்நாட்டின் தலைவர் கிம் ஜாங்-யுன் தெரிவித்துள்ளார். இந்த வெற்றி பெற்ற ஏவுகணை சோதனை அமெரிக்காவை அச்சுறுத்தவே என்று கூறியுள்ளார்.

கிம் ஜாங் இந்த சோதனை தனிப்பட்ட முறையில் இருந்து கண்காணித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ”இது ஒரு சிறந்த நிகழ்வு என்றும் குறிப்பிடத்தக்கது” என்றும் தெரிவித்தார்.