நேற்று மாலை முஸ்லிம் காங்கிரஸின் தலைவராக ‘கிழக்கின் எழுச்சி’யின் தலைவர் அல்ஹாஜ் வபா பாறுக் நியமிக்கப்பட்டுள்ளதாக ஒரு செய்தி மிக வேகமாக முக நூலூடாகவும் வாட்ஸப் குழுமங்களூடாகவும் பரவத்தொடங்கியது.
இச்செய்தியின் உன்மைத்தன்மையை அறியுமுகமாக மேற்க்கொண்ட ஆய்வுலிருந்து தெரிய வந்த தகவல்களை வாசகர்களுக்கு தருகிறோம்,
கடந்த இரண்டு தினங்களாக கிழக்கின் எழுச்சியின் தலைமைத்துவ சபை ஊடகவியலாளர்களை அனுமதிக்காத மிக இரகசியமான மந்திராலோசனைகளை நடாத்தி வருகிறது. இந்த ஆலோசனைகளின் விபரங்கள் பங்குபற்றியோர் தவிர்ந்த எவருக்கும் தெரியாததால் தத்தமது கற்பனைப்படி வெளியிடப்பட்ட கணிப்புகளின் வெளியிடப்பட்ட செய்திகளில் ஒன்றாகவே இச்செய்தியும் இருக்கலாம்.
முஸ்லிம் காங்கிரஸின் தற்போதைய தலைமையுடன் அதிருப்தி கொண்டுள்ள உயர்பீட உறுப்பினர்கள் பலரும் இம்மந்திர ஆலோசனைகளில் கலந்து கொண்டு தலைமைத்துவ மாற்றத்துக்கான ஆதரவையும் ஆலோசனைகளையும் வழங்கி வருவதன் விளைவாகவும் இப்படி ஒரு செய்தி பரவியிருக்கலாம்.
கிழக்கின் எழுச்சி தற்சமயம் மறைந்த தலைவர் அஷ்ரபின் அணிக்கும் இப்போதைய தலைவர் ஹக்கீமின் அணிகளுக்குமிடையிலான ஒரு பனிப்போராக மாற்றமடைந்து வருவதும் காரணமாயிருக்கலாம்.
ஹக்கீமுடன் முரண்பட்டவர்களை காங்கிரஸின் எதிரிகளாகவும் துரோகிகளாகவும் சித்தரித்து வெற்றி கண்ட ஹக்கீம் அணியினருக்கு கிழக்கின் எழுச்சியின் முறைப்படுத்தப்பட்ட கொள்கைப்பிரச்சாரத்தை பொய்ப்படுத்தி காங்கிரஸ் எதிராளிகளாய் அவர்களை முத்திரை குத்துதல் இயலாமல் இருக்கின்றது.
கிழக்கின் எழுச்சி இக்காலத்தின் தேவையாக பல்கலைக்கழக மாணவர் மட்டத்தில் பேசுபொருளாக மாறியிருப்பது கவனத்தில் கொள்ளப்படவேண்டிய மிக முக்கிய விடயமாகும்.
எல்லாவற்றுக்கு மேலாய் கிழக்கின் எழுச்சி மறைந்த தலைவர் அஷ்ரபின் அணியாகவும் தற்போதைய காங்கிரஸ் ஆதரவாளர்கள் ஹகீமின் ஆதரவாளர்களாகவும் சாதாரண பார்வையாளால் நோக்கப்படுவது கிழக்கின் எழுச்சிக்கு மிக வேகமான மக்கள் ஆதரவை சேர்த்தவண்ணம் இருக்கிறது.
அத்துடன் கிழக்கோடு தொடர்பு பட்ட செயலாளரின் அதிகாரக்குறைப்பு, வாக்களிக்கப்பட்ட அட்டாளைச்சேனைக்கான தேசியப்பட்டியல் நியமனம் செய்யாமை உட்ப்பட்ட பல விடயங்கள் கிழக்கின் எழுச்சியை நியாயப்படுத்தும் ஆதாரங்களாக கொள்ளப்படுகிறது
கிழக்கின் எழுச்சி விடயத்தில் ஹக்கீமின் அதி உச்ச மௌனம் அவரின் அதி உச்ச அச்சத்தின் எடுகோலாகவே மக்கள் எடை போடத்தொடங்கிவிட்டனர்.
கிழக்கின் எழுச்சி அஷ்ரப் அணியாக தோற்றம் மாறி வருவதே இன்று ஹக்கீம் முகங்கொடுக்கும் பெரும் சவாலாயுள்ளது.
எல்லாக்கிழர்ச்சிகளும் எல்லா வேளைகளிலும் முறியடிக்கப்படுவதில்லை.
-அரசியன்-