இந்தோனேசியாவில் குர்ஆன் படித்தால் இலவச பெட்ரோல்

Surah Quraish (Al Quran) Tafseer_Fotor

 

இந்தோனேசியாவில் அரசுக்கு சொந்தமான பெர்டா மினா என்ற எண்ணெய் நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி தற்போது புனித ரமலான் மாதத்தில் குர்ஆன் படிக்கும் வாகன ஓட்டிகளுக்கு தலா 2 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக போஸ்டர் மூலம் விளம்பரப்படுத்தப்பட்டது.

எனவே, தலைநகர் ஜகார்தாவில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் ஏராளமான வாகன ஓட்டிகள் நீண்ட கியூ வரிசையில் நிற்கின்றனர். அங்கு அமைக்கப்பட்டுள்ள பிரார்த்தனை அறைக்கு சென்று புனித குர்ஆன் புத்தகத்தில் ஒரு பகுதியை படித்து விட்டு 2 லிட்டர் பெட்ரோல் போட்டு செல்கின்றனர்.

ரமலான் மாதம் முழுவதும் குர்ஆன் வாசிப்பதன் மூலம் முழு நூலையும் படித்து முடிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அத்துடன் வாகனங்களில் இலவசமாக பெட்ரோல் நிரப்ப முடிகிறது என்றும் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர். 25 கோடி மக்கள் தொகையுள்ள இந்தோனேசியாவில் 90 சதவீதம் முஸ்லிம்கள் உள்ளனர்.