இந்தியா-அமெரிக்கா-ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளை சேர்ந்த இன்று பசிபிக் பெருங்கடலில் கூட்டுப்போர் பயிற்சி ஈடுபட்டு வருகின்றனர்.
அமெரிக்கா-இந்தியா கடற்படை வீரர்கள் ஒன்றாக சேர்ந்து ஆண்டுதோறும் கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 19-வது ஆண்டாக கடந்த ஆண்டு சென்னை அருகே உள்ள வங்காள விரிகுடா கடலில் இந்த கூட்டுப் போர் பயிற்சி நடைபெற்றது.
இந்நிலையில், ‘மலபார்’ என அழைக்கப்படும் இந்த போர்பயிற்சியின் 20-ம் ஆண்டு ஒத்திகை கூட்டுப் போர் பயிற்சி ஜப்பான் நாட்டிலுள்ள கியூஷூ தீவில் சசேபோ அருகே பசிபிக் பெருங்கடலின் வடபகுதியில் இன்று தொடங்கியது. இந்த பயிற்சியில் அமெரிக்காவின் சக்திவாய்ந்த விமானம்தாங்கி போர்க் கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்திய கடற்படையை சேர்ந்த சத்புரா, சஹாயாத்ரி, சக்தி, கிர்ச் ஆகிய நான்கு போர்க்கப்பல்கள் இந்த பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த ஆண்டு ஜப்பானும் இந்த கூட்டுப் போர் பயிற்சியில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது.
வரும் 13-ம் தேதியுடன் இந்த பயிற்சி நிறைவடைகிறது. அதன்பின்னர் வரும் 14 முதல் 17 தேதிவரை மூன்றுநாட்டு கடற்படை வீரர்களும் சாகச நிகழ்ச்சிகளை செய்து காட்டி ஜப்பானிய மக்களை பரவசப்படுத்தவுள்ளனர்.