மகிந்த ராஜபக்ச தலைமையில் புதிய கட்சியை ஆரம்பிக்க கோரிக்கை !

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அகில இலங்கை செயற்குழு மற்றும் கட்சி மாநாட்டை கூட்டி கட்சியை பாதுகாக்கக் கூடிய மற்றும் கட்சியை உண்மையாக நேசிக்கக் கூடிய ஒருவரை தலைவராக தெரிவு செய்ய வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர பிக்கு அமைப்பு தெரிவித்துள்ளது. 

mahindaஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய தலைமையானது ஐக்கிய தேசியக் கட்சியின் விருப்பு வெறுப்புகளுக்கு அமைய செயற்படுகிறது என அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் வட்டினாபஹா சோமானந்த தேரர் தெரிவித்துள்ளார். 

ஆரம்பத்தில் இருந்து இரத்தம், கண்ணீர், வியர்வை சிந்தி பாதுகாத்த கட்சியை தற்போது பாதுகாத்து கொள்ளும் காலம் வந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறப்புரிமைகள் மற்றும் பதவிகளை காப்பாற்றிக்கொள்ள எந்த கீழ்த்தரமான வேலையை செய்யவும் தயாராக இருக்கின்றனர். 

இவர்களின் சில கருத்துக்கள் மற்றும் செயற்பாடுகள் கட்சியின் அழிவுக்கு காரணமாகியுள்ளது. 

இதனால், கட்சியை பாதுகாக்க நாட்டின் 5வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச தலைமையில் புதிய கட்சியை ஆரம்பிக்க வேண்டும் என கோரிக்கை விடுப்பதாகவும் வட்டினாபஹா சோமானந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்