நாட்டுக்கு உள்ளும் வெளியேயும் ஈழக் கொள்கைகள் கோட்பாடுகள் தோற்கடிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் பலிகளின் ஈழக் கொள்கைகள் கோரிக்கைகளை தோற்கடிக்க அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்புப் பெற்றுக் கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தத்தின் பின்னரான காலப் பகுதியில் உருவாக்கப்பட வேண்டிய நல்லிணக்கம், சகோதரத்துவம், சகவாழ்வு என்பன உருவாக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் மீளவும் தமிழ் இளைஞர்கள் ஆயுதங்களை ஏந்துவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் சீ.வீ.குணரட்னவின் 16ம் ஆண்டு நினைவு நிகழ்வுகளில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
’27 ஆண்டுகள் தமிழ் மக்கள் முகாம்களில் தங்கியிருந்தார்கள் அவ்வாறு உங்களினால் இருக்க முடியுமா என நான் கேள்வி எழுப்புகின்றேன். எனவே நாம் அனைவரும் நமது பிரச்சினைகளைப் போன்றே ஏனையவர்களின் பிரச்சினைகளையும் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்’ என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.