சீனாவில் சிச்சுவான் மாகாணத்தில் பெய்லாங் ஏரி உள்ளது. சுற்றிலும் மலை சூழந்துள்ளதால் சுற்றுலா பயணிகளை அந்த ஏரி பெரிதும் கவர்ந்துள்ளது. அந்த ஏரியில் உல்லாச படகு சவாரி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் ஒரு சுற்றுலா படகு, 18 பேரை உல்லாச சவாரிக்கு அழைத்து சென்றது.
ஆனால் அப்போது பலத்த காற்று வீசியதால், அந்த படகு சற்றும் எதிர்பாராத வகையில் ஏரியில் கவிழ்ந்து விட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும், மீட்பு பணி முடுக்கி விடப்பட்டது.
இதில் ஒரு குழந்தை உள்பட 4 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஆனால் அந்த குழந்தைக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தபோது பலனின்றி பரிதாபமாக இறந்தது.
14 பேரை காணவில்லை. அவர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.