பனாமா ஆவணம் தொடர்பில் அரசு விசாரணை நடத்தும் – அமைச்சர் டிலான்

பனாமா இரகசிய ஆவணங்களில் இலங்கையர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் டிலான் பெரேரா இதனைக் குறிப்பிட்டார்.

dilan perera

 

அரசாங்கத்திலுள்ள பிரபல அரசியல் வாதியொருவரின் பெயர் பனாமா இரகசிய ஆவணப்பட்டியலில் வெளியாகியுள்ளமை குறித்தும் இதன்போது ஊடகவியலாளர்களினால் கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த பெயரை கண்டு தான் ஆச்சரியப்படவில்லை எனவும், ஆனால் அவர் பௌத்த சம்மேளனத்துடன் தொடர்புடைய ஒருவர் என்ற விதத்தில் தான் ஆச்சரியமடைவதாகவும் அவர் குறிப்பிட்டார்.