கேரள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது சோனியா காந்தி பேசியதாவது:-
இந்தியா தான் என் என்னுடைய நாடு. என்னுடைய இறுதி மூச்சு வரை நான் இங்கு தான் இருப்பேன். இந்தியாவிற்கான என்னுடைய அர்ப்பணிப்பை பிரதமர் மோடியால் வெளியேற்றி விட முடியாது.
ஆம். நான் இத்தாலியில் தான் பிறந்தேன். இந்திரா காந்திக்கு மருமகளாக நான் இந்தியாவிற்கு 1968-ம் ஆண்டு வந்தேன். இந்தியாவில் 48 ஆண்டுகள் என்னுடைய வாழ்க்கையை கழித்துவிட்டேன். இது தான் என்னுடைய வீடு. என்னுடைய நாடு.
பெருமைக்குரிய நேர்மையான பெற்றோர்களுக்கு மகளாக பிறந்தேன். அதற்காக ஒரு போதும் வெட்கப்பட மாட்டேன். என்னுடைய தாய் 93 வயதில் இன்னும் இத்தாலியில் தான் உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி என்னுடைய உணர்வுகளை புரிந்து கொள்வார் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால், நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.
ஹெலிக்காப்டர் ஊழல் தொடர்பான இத்தாலி நாட்டின் தீர்ப்பு காங்கிரஸ் கட்சியினை பாதித்துள்ளதாக மோடி கூறியுள்ளது முற்றிலும் தவறானது.
இவ்வாறு அவர் பேசினார்.