சித்திரவதை தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் அதிகாரி வெளியிட்ட அறிக்கை ஆராயப்பட உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சித்திரவதைகள், பலவந்த தண்டனை விதித்தல்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதி ஜூவான் மென்டாஸ் இலங்கையில் தொடர்ந்தும் சித்திரவதைச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக குற்றம் சுமத்தியிருந்தார்.
படைத்தரப்பினர் காவல்துறையினர் கைதிகளையும் சந்தேக நபர்களையும் பாலியல் துஸ்பிரயோகம் உள்ளிட்ட பல்வேறு துன்புறுத்தல்களில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியிருந்தார்.
இந்த அறிக்கை தொடர்பில் ஆராய்ந்து அது தொடர்பிலான நிலைப்பாட்டை அரசாங்கம் வெளியிடும் என வெளிவிவகார பிரதி அமைச்சர் ஹர்ஸ டி சில்வா தெரிவித்துள்ளார்.