சர்வதேச அழுத்தங்கள் காரணமாகவே புதிய அரசியலமைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது

mahindha-angry_Fotor

 

புதிய அரசியலமைப்பு சட்ட முன் மொழிவுகள் தொடர்பில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கவனத்திற் கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் – கல்கமுவையில் இடம் பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் சர்வதேச அழுத்தங்கள் காரணமாகவே புதிய அரசியலமைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றதாக மகிந்த இதன்போது குற்றம் சாட்டியுள்ளார்.