ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்கு மாகாணங்களில் ஒன்றான கான்ஸியில் உள்ள கந்தஹார்-காபுல் இணைப்பு நெடுஞ்சாலை வழியாகவந்த அந்த பஸ், எதிர்திசையில் வேகமாக வந்த பெட்ரோல் டேங்கர் லாரிமீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் பெட்ரோல் டேங்கர் லாரியும், பஸ்சும் தீபிடித்து எரிந்தது.
இந்த விபத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 52 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், படுகாயமடைந்த 73 பேர் அருகாமையில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கான்ஸி மாகாண அரசு செய்தி தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவரும் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இந்த விபத்தின் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.a