எங்களுடைய நிபுனர் குழு அறிக்கையில் எந்த இடத்திலும் சுன்னாகம் நிலத்தடிநீரில் எண்ணெய் கலக்கவில்லை என்று குறிப்பிடப்படவில்லை.
இதை நாம் மிகத்தெளிவாக குறிப்பிடுகின்றோம். நிபுனர் குழு ஆராய்ந்த விடயங்களில் கண்டுபிடிக்கப்பட்டது என்னவென்றால் எண்ணெயில் இருக்கின்ற ஆபத்தான நச்சுமாசுக்கள்தான் நீரில் கலக்கவில்லை என்பதே.
மாறாக எண்ணெய் கலக்கவில்லை என்று நிபுனர் குழு எந்த முடிவையும் எடுக்கவில்லை என வட மாகாண விவசாய அமைச்சர் ஜங்கரநேன் அடித்துக் கூறுகின்றார்.
நேற்று புதன் கிழமை 04-05-2016 கிளிநொச்சியில் வடக்கு மாகாண குறிததொதுக்கப்பட்ட நிதியிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கி வைத்த பின்னர் சுன்னாகம் நிலத்தடி நீர் தொடர்பில் நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீமீன் கருத்துக்கு பதிலளிக்கும் போதே ஜங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அமைச்சர் ரவூப் ஹக்கீம் வடக்கு மாகாண சபையின் சார்பில் முதலமைச்சரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் அறிக்கையை படிக்கவில்லை என்றே நான் நினைக்கின்றேன்.
அவ்வாறு படிக்காதன் காரணமாக தான் அவர் தனது கருத்தை தெரிவித்திருக்கின்றார்.
எண்ணெயில் 200க்கு அதிகமான இராசயனங்கள் இருக்கின்றன அவ்வளவு இராசயனங்களையும் சோதிப்பதற்கு எங்கேயும் எந்த ஆய்வும் செய்ய முடியாது.
ஆகவே நாங்கள் எண்ணெயில்இருக்க கூடிய ஆபத்தான இராசயனங்களைதான் சோதித்து அறிந்தோம்.
அந்த ஆபத்தான இராசயனங்கள் மனித உடலுக்கு ஆபத்தை விளைவிக்க கூடிய அளவுக்கு சுன்னாகம் நிலத்தடி நீரில் இல்லை என்றே எங்களுடைய நிபுனர்கள் குழு ஆய்வின் கண்டுபிடிப்பாக இருந்தது.
ஆகவே இதில் நாங்கள் எந்த நிறுவனத்தையும் காப்பற்ற வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இல்லை.
விஞ்ஞானம் என்பது பல தடவைகள் வாய்ப்பு பார்க்கப்பட்ட உண்மைகளின் தொகுப்பு. அது யாரையும் தண்டிக்க வேண்டும் என்பதற்காகவோ அல்லது யாரையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே பொய் சொல்வது விஞ்ஞானமாக இருக்க முடியாது.
அதனை அரசியல்வாதிகளால் தான் அவ்வாறு செய்ய முடியும்.
எனவே மாகாண சபையின்நிபுனர்கள் குழு அறிக்கை தவறாக விளங்கிக்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே எங்களை பொறுத்தவரை எங்களுடைய நிபுனர் குழுவின் அறிக்கையின் படி ஆபத்தானநஞ்சுப்பொருட்கள் இல்லை என்றுதான் சொல்லியிருக்கிறது.
நீதிமன்றம் கூட சுன்னாகம் நிலத்தடி நீர் தொடர்பில் மேலதிக ஆய்வுகளை மேற்கொள்வதற்கு வடக்குமாகாண பிரதம செயலாளருக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
எனவே இந்த விடயம் தொடர்பாக நாம் விரைவாக ஒரு முடிவுக்கு வருவோம் ஏனெனில் இதனை பயன்படுத்தியே பலர் தங்களுடைய அரசியலை மேற்கொள்கின்றார்கள்.
தங்களுடைய உள்நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள முயற்சிக்கின்றார்கள் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.