பாராளுமன்றில் இடம்பெற்ற மோதல்கள் தொடர்பான வீடியோ மற்றும் அறிக்கை பகிரங்கப்படுத்தப்படும் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலான சீ.சீ.ரீ.வி. காட்சிகள் முழுமையாக மக்களின் பார்வைக்கு விடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இன்றைய தினம் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது பற்றி தீர்மானிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் நடத்திய விசாரணை அறிக்கையும் வெளியிடப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். பாராளுமன்றின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்த வீடியோ காட்சிகளை மக்கள் ஏற்கனவே செய்தி அறிக்கைகளில் பல தடவைகள் பார்வையிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.