இண்டர்நெட் தொழில்நுட்பங்கள் குறித்த புள்ளிவிபரங்களை வெளியிடுவதில் முன்னிலையில் இருந்து வரும் இணையதளமான NetMarketShare.com. இண்டர்நெட் பிரவுசர்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் நடப்பு ஆண்டு ஏப்ரல் மாதம் வரையிலான காலகட்டத்தில் கூகுளின் குரோம் பிரவுசர் முதலிடத்தை பிடித்து 41.7 சதவீத கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட்டின் இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 41.4 சதவீதத்துடன் 2-வது இடத்தையும், மொசில்லா பயர்பாக்ஸ்
9.7 சதவீதத்துடன் 3-வது இடத்தையும் பிடித்துள்ளது.
கூகுள் குரோம் பிரவுசருக்கு போட்டியாக மைக்ரோசாப்ட் அதிவேக ’எட்ஜ்’ பிரவுசரை விண்டோஸ் 10 இயங்குதளத்தில் களமிறக்கியிருந்தது. எனினும், கம்ப்யூட்டர்களை பயன்படுத்துபவர்கள் கூகுள் குரோமையே அதிகம் விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.