அதாவுல்லாவும் – மே தின நிகழ்வும்

athaullah

 

  மே தின நிகழ்வில் அதாவுல்லா கலந்துகொள்ளப் போகின்றார் என்ற செய்தி வெளியானதும், ஒரு சிலருடைய பதிவுகள்மிகவும் கீழ்த்தரமானதாக இருக்கக் கண்டேன். ஆள் மாறி ஆள் வசை பாடிக் கொண்டிருக்கின்றனர். “ஊர் ரெண்டு பட்டால்கூத்தாடிக்கு கொண்டாட்டம்” வசைபாடும் பதிவுகளை பல கூத்தாடிகள் ஷெயர் செய்து கொண்டிருக்கின்றனர்.

நல்ல சமூக எழுத்தாளர்கள் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தவர்களின் இந்நிகழ்வு சம்மந்தமான பதிவுகளை பார்க்கும்போது ஒரு வகையான மனநோயாளியாக இவர்கள் இருப்பார்களா? என்று ஒரு பலத்த சந்தேகவும் எனக்குள் வந்தது. அப்படிஅதாவுல்லாவை மிகவும் கீழ்த்தரமாக சித்தரித்துக் காட்ட முற்பட்டுள்ளார்கள்.

ஒரு சாரார் மீது கொண்ட பிரியமும் வெறுப்பும் மனிதர்களை நீதி செலுத்துவதிலிருந்து நம்மை தடுத்து விடும். இது மனிதஇயல்பு ஆனால் ஒரு முஸ்லிம் அப்படி அடிபட்டுபோகமுடியாது –

’எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதிசெய்யுங்கள். இதுவே இறையச்சத்திற்கு மிக நெருக்கமானது. அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்… (அல்குர்ஆன்5:8)

“ஒருவருக்காக இன்னொருவரை புறக்கணிக்கும் போதுதான்-நாம் அப்பட்டமான சுயநலவாதியாக மாறிவிடுகின்றோம்” என்பதை இந்த எழுத்தாளர்கள் மறந்தே விடுகின்றனர்.

மு. கா காரர்களின் பதிவுகள் “உனக்கு வந்த ரத்தம்,எனக்கு வந்தா தக்காளி சட்னி'”யா என்பது போல இருக்குது

இதுவரைக்கும் மு. கா. மூலம் நம் சமூகத்துக்கு “மலையை குடைந்ததில மண்ணாங்கட்டிதான் மிச்சம்”

மைத்திரிக்கு வாக்களித்த பல்வேறு தரப்புகள் தங்கள் கோரிக்கைகளுடந்தான் மைத்திரியை ஆதரித்தார்கள், ஆனால் மு. கா. மட்டும் கடைசி நேரத்தில் ரஜனி ஸ்ரையில் கல்முனையில் மக்கள் வெள்ளத்தோடு மிதந்து வந்து சேர்ந்தவர்கள், இவர்கள் ஒரு கோரிக்கைகளையும் முன் வைத்திரிக்க வில்லை. மைத்திரி வென்ற பின்னராவது ஒரு சிலகோரிக்கைளையாவது முன் வைத்து அதற்கான களம் அமைத்திருக்க முடியும், மாறாக மு. கா. வழமை போன்று பதவி சார்தேவைகளுக்காக நாக்கை வெளியில் போட்டுக் கொண்டு பேரம் பேசினார்களே தவிர, உருப்படியாக ஒன்றும் திட்டமிட்டுசெயல் படவும் வில்லை. செயல்படப் போவதுமில்லை.

மு. கா. கொப்பிழந்த குரங்குபோல தாவித் தாவி ஒரு தெளிவில்லாத போக்கை தொடர்சியாக கையாண்டு வந்ததை இந்தப்போராளிகள் மறந்து விட்டார்கள் என நினைகின்றேன்.

கடந்த வருடம், ஜூன்14 ம் திகதி வெளியான ஒரு சிங்களப் பத்திரிகையில் பிரதம ஆசிரியரின் கட்டுரை ஒன்றில் “ஹகீம், இறுதிவரை அவர்களின் முடிவில் உறுதியாக இருப்பார்கள் என்று நம்மால் எதிர்பார்க்க முடியாது காரணம் அவர்கள்நடந்துவந்த பாதை மிகவும் தெளிவானது, பேரம் பேசும் போது சமூகம் மறக்கப்பட்டுவிடும்” என்று கட்டமாகஎழுதப்பட்டிருந்தது. ஹகீமைப் பற்றி சிங்களவர்களே எப்படி விளங்கி வைத்துள்ளார்கள்!!!???

இப்போது அதாவுல்லாவும் அரசாங்கத்தோடு சேர்ந்து விட்டார், பிரச்சினைகள் மீண்டும் தூசி தட்டி எடுக்கப்படும் நிலைகாணப்படுகின்றது. கடந்த தேர்தல் காலங்களில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக சில குறிப்பிட்டு கூறும், மிகவும்வெறுப்பான சம்பவங்கள் நடைபெற்ற வரலாறுகள் எம் கண்முன்னே வந்து நிற்கின்றன. இதற்கு முழுக் காரணமும் எமதுஅரசியல் வாதிகள் பயன்படுத்தும் வார்த்தைகளும் ஒரு பிரதான காரணமாக அமைந்து விடுகின்றது. பிரச்சாரத்தின் போதுகையாளும் அணுகு முறையும் கூட. ஒருவர் போசும்போது பலர் பல தரப்பட்டவர்கள் பல அறிவு மட்டங்களைகொண்டவர்கள் கேட்பார்கள் இவர்கள் மத்தியில் போசுபவர் அவர்களை அறிவு பூர்வமாக அணுகாமல்

 

                                                     சபூர் ஆதம்

saboor atham