பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் தனது உரிமையாளரின் பாதுகாப்பிற்காக சென்ற ஆண்டு மட்டும் ரூ.28 கோடியை செலவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2013-ம் ஆண்டு ரூ.17.49 கோடியையும், 2014-ம் ஆண்டில் ரூ.36.96 கோடியையும் அவரது பாதுகாப்பிற்காக பேஸ்புக் செலவிட்டுள்ளது. 2013-ம் ஆண்டு முதல் இதுவரை மொத்தம் ரூ.80 கோடியை சக்கர்பெர்க்கின் பாதுகாப்பிற்காக மட்டும் செலவிட்டுள்ளது பேஸ்புக்.
புளும்பெர்க் கோடீஸ்வரர்களின் பட்டியலின்படி உலகின் 8-வது பெரிய பணக்காரராக மார்க் சக்கர்பெர்க் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.