ஏ.எஸ்.எம்.ஜாவித்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 20வது ஆண்டு நிறைவு விழா இன்று (30) கொழும்பு 07 இல் உள்ள விளையாட்டுத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டிருந்தார். விஷேட பேச்சாளர்களாக ஜாமிய்யா நளீமியாவின் பிரதிப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.சி;.அஹார் முஹம்மத் மற்றும் ஆசிய பசுபிக் சர்வதேச ஊடக ஒத்துழைப்பு (டென்மார்க்) அமைப்பின் பிராந்திய ஆலோகர் கலாநிதி ரங்க கலன்சூரி ஆகியோர் உட்பட பல அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், கொழும்பு மாநகர மேயர், கல்விமான்கள், புத்தி ஜீவிகள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது புத்தி ஜீவிகள் ஆறுபேர் பிரதமரால் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், போரத்தின் மலர் வெளியிடப்பட்டதுடன் போரத்தினால் நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பெறுமதிவாய்ந்த பரசில்களும் வழங்கப்பட்டன.