மாற்றுத்திறனாளிகளுக்கான விஷேட அலகு திறந்து வைப்பு!

அசாஹீம் 

 

மாற்றுத் திறநாளிகளின் கல்வி முன்னேற்றத்தை கருத்திற் கொண்டு கோறளைப்பற்று பிரதேச செயலகத்தினால் வாழைச்சேனை புதுக்குடியிருப்பு வாணி வித்தியாலயத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான கல்வி கற்கம் விசேட அலகு நேற்று (புதன்கிழமை) திறந்து வைக்கப்பட்டது.

01_Fotor
  
புகலிடத்தில் கல்வி பயின்று கொண்டிருக்கும் பதினாறு மாற்றுத் திறனாளி மாணவர்களில் எட்டு மாணவர்கள் சாதாரண பாடசாலை மாணவர்களுடன் இணைக்கப்பட்டுள்ளனர் இவர்களுக்கு விசேட அலகு ஊடாக கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் நடாத்தப்படுவதுடன், அவர்களுக்கான அனுசரணையை புகலிடம் நிறுவனம் வழங்கி வருகின்றது.
 
இங்கு மாற்றுத்திறனாளி மாணவர்களின் வரவேற்பு நடனம் இடம்பெற்றிருந்தது அத்தோடு வரவேற்பு நடனத்தை வழங்கிய மாற்றுத்திறனாளி மாணவி இந்தியாவில் நடைபெற்ற நடனத்தில் வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

06_Fotor

புகலிடம் நிறுவனத்தின் தலைவர் எஸ்.டெரன்ஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன், கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ். ஸ்ரீகிருஸ்ணராஜா, ஆசியா மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கான திட்ட இணைப்பாளர்களான உடே ரெபனா, சில்கி, ஆசியா மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் இலங்கைக்கான இணைப்பாளர் எஸ்.விமலன், ஜப்பான் நாட்டின் சமூக செயற்பாட்டாளர் மியூகி கியூரே, கோறளைப்பற்று பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் ஏ.நஜீம், சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜெகதீஸ்வரன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.