பிரதமர் – எதிர்க்கட்சித் தலைவர் இடையிலான சந்திப்பு !

Ranil-and-Sampanthan-415x260பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று, அலரி மாளிகையில் நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்து கொண்டார்.

இதன்போது இராணுவத்தினரின் காணி அபகரிப்பு, தற்போது வடக்கு, கிழக்கில் திடீரென அதிகரித்துள்ள கைதுகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

பரவிப்பாஞ்சான் பிரதேசத்துக்கு, இரா.சம்பந்தன் சென்றமை தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகள், அப்பகுதி மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

இலங்கை இராணுவம் நிலைகொண்டிருக்கின்ற அந்தப் பகுதி, பொது மக்களுக்கு சொந்தமான பகுதியென்பதாலும், அங்கு அவர்களின் வீடுகள் இருப்பதாலும், எஞ்சியுள்ள 54 குடும்பங்களையும் மீளக்குடியேற்றுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, பிரதமரிடம், இரா.சம்பந்தன் கேட்டுக் கொண்டார்.

இதனைத் தாம் கவனத்தில் கொள்வதாக உறுதியளித்த பிரதமர், பரவிப்பாஞ்சான் பிரதேசத்தில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் தொடர்பாக அறிக்கை கோரவுள்ளதாகவும், தெரிவித்துள்ளார்.