முன்னாள் சபாநாயகரும் சிரேஷ்ட அமைச்சருமான எம்.எச்.மொஹமட் அவர்களின் மறைவையிட்டு அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் அனுதாப அறிக்கை!

ADJF_Logoஅப்துல் அஸீஸ்

ன்று காலமான  முன்னாள் சபாநாயகரும் சிரேஷ்ட  அமைச்சருமான எம்.எச்.மொஹமட் அவர்களின் மறைவையிட்டு  அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனம் தங்கள் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துவதுடன், அன்னாரின் மறுமை வாழ்வின் ஈடேற்றதுக்காக  தமது அங்கத்தவர்களை  பிரார்த்திக்குமாறும் வேண்டியுள்ளது.M.H.-Mohammad

நாட்டின் இன, மத, கல்வி மேன்பாட்டிக்காக   உழைத்த மூத்த அரசியல்வாதியான இவரின் மறைவு  எமது நாட்டின்  அனைத்து இன மக்களுக்கும் ஈடுசெய்ய முடியாத மாபெரும் இழப்பாக அமைந்துள்ளது.

சகோதர இன  மக்கள் மத்தியில் பெரும் நன்மதிப்பைக்கொண்ட  60 வருட அரசியல் முதிர்வையுடைய  இவர்  இலங்கை பாராளுமன்றத்தின் 14வது சபாநாயகராக  பணியாற்றியதுடன்  கொழும்பு மாநகர சபையின் மாநகர முதல்வராக  தெரிவு செய்யப்பட்டு   இலங்கையின் முதலாவது முஸ்லிம் மாநகர முதல்வராகவும்  பணியாற்றியுள்ளார். 

இஸ்லாமிய நிலையத்தின்  தலைவரான இவர்  இலங்கையில் பல பிரதேசம்களில் இருந்தும் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு சவூதி அராபிய சமுகப்பணி அமைப்புக்களின்னூடாக புலமைப்பரிசில்களை பெற்றுக்கொடுத்து அவர்களின் கல்வி மேன்பாட்டிற்காக   உதவிவழங்கியுள்ளார்.  அவரின் மறைவினால்  துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தவர்கள்  மற்றும் ஏனைய  அனைத்து மக்களுக்கும் எங்களுடைய  ஆழ்ந்த கவலையை  தெரிவித்துக் கொள்கின்றோம் என அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் சார்பில் அதன் தலைவர் மீரா எஸ். இஸ்ஸதீன், செயலாளர் எஸ்.எல்.அஸீஸ் ஆகியோரால் வெளியிட்டுள்ள அனுதாப அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.