கோபாலபுரத்தில் கருணாநிதியுடன் காங்கிரஸ் வேட்பாளர்கள் சந்திப்பு

201604211317557324_Congress-candidates-meeting-with-Karunanidhi-in-Gopalapuram_SECVPF

 

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 33 காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை இன்று காங்கிரஸ் கட்சி தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் தலைமையில் 10 காங்கிரஸ் வேட்பாளர்கள் சந்தித்தனர்.

விஜயதரணி (விளவங்கோடு), லோகநாதன் (பாபநாசம்), ராமச்சந்திரன் (அறந்தாங்கி), கார்த்திகேயன் (மதுரை வடக்கு), கே.ஆர்.ராமசாமி (காரைக்குடி), பி.வி. ராஜேந்திரன் (வேதாரண்யம்), மயூரா ஜெயகுமார் (கோவை தெற்கு), மனோகர் (சூலூர்), ஏ.எம்.முனிரத்தினம் (சோளிங்கர்), மகேந்திரன் (பட்டுக்கோட்டை) ஆகியோர் கருணாநிதிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர்.

சந்திப்பு முடிந்து வெளியே வந்த திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:–

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், புதிய தமிழகம் உள்பட பல்வேறு கட்சிகள் உள்ளன. தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறும். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் 10 பேர் இன்று தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

மீதமுள்ள 8 காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் இன்று அல்லது நாளை வெளியாகும்.

ஜெயலலிதா பொதுக்கூட்டத்தில்  மயக்கம் அடைந்து உயிரிழந்த சம்பவம் நடந்தது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்தவர்கள் குடும்பங்களுக்கு அ.தி.மு.க. கட்சி ரூ. 25 லட்சம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தி.மு.க. கருணாநிதியை புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தனது கட்சி வேட்பாளர்களுடன் சந்தித்து வாழ்த்து பெற்றார்.