கூட்டு ஸகாத் அனுபவங்களும், விஸ்தரிப்பும் பற்றிய ஸக்காத் அமைப்புகளுடனான கலந்துரையாடல்

national shoora council

 

தேசிய ஷுரா சபையின் சமூக பொருளாார உப குழு இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் வறுமை ஒழிப்பு மற்றும் சமூக பொருளாதார மேம்பாட்டை இலக்காகக் கொண்டு செயற்பட்டு வருவதை நீங்கள் அறிவீர்கள்.

 

இவ்வுபகுழு மேற்கொண்ட ஆய்வுகளின் படி நாடளாவிய ரீதியில் நகர மற்றும் கிராமியச் சூழலில் வசிக்கும் முஸ்லிம்கள் மரபு ரீதியான சில பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தாலும்ஒப்பீட்டுரீதியில் இலங்கை முஸ்லிம்களின் சமூக பொருளாதார நிலைமை திருப்திகரமானதொரு மட்டத்தை அடையவில்லை. 1995/96 காலப் பகுயில் 28.8% ஆக இருந்த தேசிய வறுமை குறிகாட்டி 2012/13 இல் 6.7% மாகக் குறைவடைந்துள்ளது. இருப்பினும்துரதிஷ்டவசமாக முஸ்லிம் சமூகத்தில் இன்றும் வறுமை நிலை  தேசிய வறுமை குறிகாட்டியை விட பலமடங்கு அதிகமாக இருக்கும் என உணரக் கூடியதாக உள்ளது.

 

இந்நிலையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு தீர்வாக ஸகாத் காணப்படுகிறது. எனவே  தேசிய ஷுரா சபையின் சமூக பொருளாார உப குழு கூட்டு ஸகாத் நடைமுறைகளைப் பரிசீலித்து அதனைத் திறன்மிக்க வகையில் விஸ்தரிப்பதையும்ஊக்குவிப்பதையும் கவனத்தில் கொண்டுள்ளது.

 

எனவே இவ்வுபகுழுவின் ஒர் ஆரம்ப பணியாகஇலங்கையில் பிராந்திய மற்றும் கிராமிய மட்டத்தில் செயற்பட்டு வரும் அனுபவமிக்க ஸகாத் அமைப்புக்களுடனான சந்திப்பொன்றை ஏற்பாடுசெய்து பல்வேறு தரப்பினரினதும் அனுபவங்களைப் பெற்று இத்துறையை மேலும் மேம்படுத்துவதற்கான வழிமுறைகளைக் கண்டறிய உத்தேசித்துள்ளது.

 

இன்ஷா அல்லாஹ்எதிர்வரும் 2016 ஏப்ரல் 23ஆம்  கொழும்பில் நடைபெறவுள்ள இக்கலந்துரையாடலுக்கு நாடளாவிய ரீதியில் செயற்பட்டுவரும் ஸகாத் அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

– ஊடகப்பிரிவு
தேசிய ஷுரா சபை