இலங்கை வரலாற்றில் முஸ்லிம்களின் அரசியல் அதிகாரம் பல்வேறு சமூக சிந்தனையாளர்கள் மூலமாக தொன்றுதொட்டு அவ்வப்போது ஆட்சியில் உள்ளவர்களின் தயவின் மூலம் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றது. இப் போக்கு குடியரசு யாப்பு அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து தமிழ் மக்களின் விடுதலைக் கோஷம் கருக் கொண்டதன் விளைவாக முஸ்லிம்களின் அரசியல் பரிமாற்றத்திலும் வித்தியாசப் போக்கு அவ்வப்போது தோன்றி மறைந்தது. 1983ஆம் ஆண்டின் இனக்கலவரத்தின் பிற்பாடு நாட்டில் ஏற்பட்ட பாரிய இன விரிசல் முஸ்லிம் மக்களின் அரசியலிலும் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. மறைந்த தலைவர் மாமனிதர் அஷ்ரப்பின் சிந்தனையில் தூரநோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களுக்கான அரசியல் முகவரியை கொடுத்து, பேரினவாதக் கட்சிகளின் தயவில் இருந்து விடுபட்டு சுயமாக செயற்படக் கூடிய அரசியல் சூழலுக்கு வித்திட்டது.
முஸ்லிம்கள் தமிழை தாய்மொழியாகக் கொண்டதனால் முஸ்லிம்களும் தமிழர்கள்தான் என்று முன்வைக்கப்பட்ட கோஷத்தை உடைத்தெறிந்து முஸ்லிம்கள் தனியினம் என்ற ரீதியில் இனப்பிரச்சினைத் தீர்வில் தங்களுக்கும் பங்குண்டு என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கான அடித்தளத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தோற்றம் ஏற்படுத்தியது. இருந்தபோதிலும் மறைந்த தலைவர் மாமனிதர் அஷ்ரபின் கோரிக்கைகளான ஒன்றிணைந்த வடகிழக்கில் முஸ்லிம் பெரும்பான்மை அலகு அல்லது தென்கிழக்கு அலகு மற்றும் இவற்றின் அச்சாணியான கரையோர மாவட்ட கோரிக்கை 1988ஆம் ஆண்டின் முதலாவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன – இந்திய பிரதமர் ராஜிவ் காந்தி ஒப்பந்தத்தில் கவனத்தில் எடுக்கப்படவில்லை. இவ்வொப்பந்தத்தின் மூலம் முஸ்லிம்கள் முற்றாக புறக்கணிக்கப்பட்ட நிலையில் 7.9.1988ஆம் ஆண்டு வடகிழக்கு பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் வாயிலாக விசேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் இணைக்கப்பட்டது. இவ்விணைப்பால் கிழக்கில் 33வீதமாக இருந்த முஸ்லிம் இனப்பரம்பல் 17வீதமாக குறைந்தது.
இருந்தபோதிலும் முஸ்லிம் காங்கிரஸ் வடகிழக்கு மாகாண சபையில் அங்கம் வகித்து, முஸ்லிம்களின் சார்பில் பேசும் சக்தியாக அங்கீகரிக்கப்பட்டு இனப்பிரச்சினைக்கான பல சுற்றுப் பேச்சுவார்தைகளில் கலந்துகொண்டது. குறைந்தபட்ச தீர்வாக கரையோர மாவட்ட கோரிக்கையை முதன்மைப்படுத்துமாறு பல இடங்களில் கேட்டுக்கொண்டது. அஷ்ரபின் இக்கோரிக்கைகள் இலங்கையின் ஒற்றையாட்சிக்கோ இறைமைக்கோ எவ்விதத்திலும் தீங்காகாது என்பதை, வரதராஜபெருமாளின் 1.3.1990 திகதிய ஈழ பிரகடனத்தினை எதிர்த்ததன் மூலம் நிரூபித்துக்காட்டியது.
எவ்வாறு வடக்கு, கிழக்கு மாகாணங்கள் முஸ்லிம்களின் ஆலோசனையின்றி இணைக்கப்பட்டதோ அதேபோல் அதன் பிரிவும் அமைந்தது. ஜே.வி.பி. கந்தளாய் பா.உ. ஜயந்த விஜேசேகர, சம்மாந்துறை ஏ.எஸ்.எம். புஹாரி மற்றும் உகணையை சேர்ந்த எல்.பி. வசந்த பிரியதிஸ்ஸ ஆகியோரின் அடிப்படை உரிமை மனு மீதான வழக்கின் உயர் நீதிமன்ற தீர்ப்பின் மூலம் 16.10.2006ஆம் ஆண்டு வடக்கில் இருந்து கிழக்கு மீண்டும் பிரிக்கப்பட்டது. மறைந்த தலைவர் அஷ்ரப் மிகவும் வலியுறுத்திய விடயம்தான், வட-கிழக்கு இணையும் போதோ பிரியும் போதோ முஸ்லிம்களின் இருப்பு அவர்களின் பூர்வீக நிலத்தில் உறுதிப்படுத்தப்பட வேன்டும் என்பதாகும்.
அடிக்கடி பேசப்படும் முஸ்லிம் பெரும்பான்மை மாகாண அலகுக் கோரிக்கைக்கு நியாயமான பல காரணங்கள் உள்ளன. வரலாற்றில் நடந்து முடிந்த மற்றும் இன்னும் நடந்து கொன்டிருக்கும் காரணங்களும் இதிலுள்ளன. இதில் பிரதானமானது நில கபளீகரம் ஆகும். உதாரணமாக, முஸ்லிம்களின் பூர்வீக இடமாக இருக்கும் அம்பாறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக காணிகள் பறிபோய்க் கொண்டிருக்கின்றது. இன்றுவரை தீர்வு காண முடியாத நிலப் பிரச்சினையாக உள்ள நுரைச்சோலை கண்டம் (1400 ஏக்கர்), தீகவாபி பெரிய விஹாரை- 1 (585 ஏக்கர்), தீகவாபி 2 (275 ஏக்கர்), தீகவாபி 3 (997 ஏக்கர்), வாகல்மடு (400 ஏக்கர்), வேலமரத்துவெளி (200 ஏக்கர்), சியாதரிவாடி (200 ஏக்கர்), அம்பல்தெரு சின்ன கண்டம், வெல்லக்கல் தோட்டம் (320 ஏக்கர்), கொண்டவெட்டுவான் (400 ஏக்கர்), மகா கன்டிய கட்டு (400 ஏக்கர்), அறுகம்பே – உல்லை (520 ஏக்கர்) என்பனவற்றை உதாரணமாக குறிப்பிடலாம். புனித பூமி திட்டத்தின் மூலம் 1968ஆம் ஆண்டைய விசேட ஆணைக்குழுவின் தலைவர் ரத்னதுங்க மூலமாக சுமார் 500 ஏக்கர் காணியை தீகவாபி அபிவிருத்திக்கு உள்வாங்க வேன்டும் என்று சிபாரிசு வழங்கினார். இதன் விளைவு, எவ்வித முன்னறிவித்தலுமின்றி 185 ஏக்கர் பெரியவிசாரை கன்ட கிறவுன் டைட்டில் உறுதிகளைக்கொண்ட விவசாய நிலம் அபகரிக்கப்பட்டது.
1981ஆம் ஆண்டு புள்ளிவிபரப்படி அம்பாறை மாவட்டம் 1775 ச.கி. பரப்பைக் கொண்டது. இதில் 37.2 வீதம் சனப்பரம்பலைக் கொண்ட சிங்களவர்களுக்கு 1340 ச.கி. நிலப்பரப்பும் 41.6வீத சனப்பரம்பலைக் கொண்ட முஸ்லிம்களுக்கு மிகக் குறைந்த அளவான 263 ச.கி. நிலப்பரப்பும் வழங்கப்பட்டது. முஸ்லிம்களின் காணி இழக்கப்படுவதற்கு காரணம் மொறகொட ஆணைக்குழு சிபாரிசு செய்த கரையோர மாவட்டம் வழங்கப்படாமையே என்றால் மிகையில்லை. மேலும் தமிழீழ விடுதலைப் புலிகளினால் 1990ஆம் ஆண்டு வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து, சட்டவிரோத காணி அபகரிப்பு தமிழ் ஆயுதக் குழுக்களினால் கிழக்கிலும் மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு மொத்தமாக வட-கிழக்கில் பல்வேறு இடங்களில் பல சந்தர்ப்பங்களில் பல்வேறு தரப்பினரால் கபளீகரம் செய்யப்பட்ட நிலப்பரப்பின் மொத்த பரப்பு 40,000 ஏக்கர் ஆகும். இது விடயமான முழு ஆவணங்களும் பாராளுமன்ற முறைப்பாட்டுக் குழுவிற்கு 100 நாள் திட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் செயலாளரினால் வழங்கப்பட்டது. இருந்தபோதிலும் தமிழ் மக்களின் தொடர்ச்சியான அழுத்தம் காரணமாக அவர்களின் பல காணிகள் தற்போதைய ஆட்சியில் மீட்கப்பட்டுள்ளதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.
தமிழ் பேசும் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கில் முஸ்லிம்களின் அடையாளமும், காணிகளும் இவ்வாறு திட்டமிட்ட குடியேற்றத்தினாலும் சட்டவிரோத காணி அபகரிப்பினாலும் பறிபோய் கொண்டிருக்கின்றது. தமிழ் பிரதேசங்களிலும் இதே காரணங்களினால் காணிகள் பறிபோகின்றன. எனவே, மொழியால் ஒன்றுபட்ட இரு சமூகங்கள் தீர்வுத்திட்டம் முன்வைக்கப்படும் இத்தருணத்தில் தமது வேற்றுமைகளை மறந்து தம்மைத்தாமே நிருவகிக்கும் ஒழுங்குமுறையை கொண்ட ஏற்றுக்கொள்ளத்தக்க தீர்வை பெறுவது சாலச்சிறந்தது. யுத்த வெற்றியின் பின் அமைக்கப்பட்ட அரசாங்கம் கடும் போக்குடன் சிறுபான்மை சமூகங்களுடன் நடந்து கொண்ட விதம் நல்லாட்சிக்கு வித்திட்டது எனலாம். எனவே, சிறந்த தீர்வுக்கான நல்ல சந்தர்ப்பம் இதுவாக இருப்பதனால் தம்முடைய அடிப்படை கோரிக்கைகளை நெகிழ்வுப் போக்கில் வெல்ல இரு சமூகமும் ஒன்றிணைய வேண்டும்.
இவ்விடத்தில் அஷ்ரபின் கனவாக இருந்த முஸ்லிம் பெரும்பான்மை மாகாண அலகை பற்றி குறிப்பிட வேண்டும். இது, இந்தியாவின் பாண்டிச்சேரி (புதுச்சேரி)யை ஒத்ததாகும். ஒரே மொழிபேசும் இரு சமூகங்களுக்கு உலகில் உள்ள மிகச்சிறந்த நிருவாகப் பங்கீட்டை வழங்கிய உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் நிருவாக கட்டமைப்பு சிறந்த எடுத்துக்காட்டாகும். எனவே வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிம், தமிழ் மக்கள் தங்களின் உரிமைகனை வென்றெடுக்க வேண்டுமாயின், இருசமூகமும் விட்டுக்கொடுப்புடன் நிலத்தொடர்பற்ற அதிகாரப் பகிர்வை அங்கீகரிப்பதே சாலச்சிறந்தது.
உத்தேச முஸ்லிம் பெரும்பான்மை மாகாணம் எவ்வாறு அமைய வேண்டும் என்பதை மறைந்த தலைவர் அஷ்ரபின் நோக்கில் பார்ப்போம். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள அம்பாறை மாவட்டத்தை மையமாக வைத்து முஸ்லிம் மாகாணம் உருவாக்கப்பட வேண்டும். இதில் அம்பாறை தொகுதியில் உள்ள பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த மக்கள் விரும்பினால் மத்திய அரசின் ஆட்சியின் கீழ் அல்லது வேறு மாகாணத்துடன் இணைய முடியும். 2012ஆம் ஆண்டைய புள்ளிவிபரப்படி சுமார் 181,817 பேர் மேற்படி பிரதேசத்தில் வசிக்கின்றனர்.
இது ஒன்றிணைந்த வடகிழக்கின் மொத்த சனத்தொகையில் 6.95 வீதமாகும். இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிலப்பரப்பு 2148.10 ச.கி. ஆகும். ஒன்றிணைந்த வடகிழக்கின் மொத்த நிலப்பரப்பில் இது 11.38வீதம். இப்பிரதேசத்தில் பெரும்பான்மை இனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் 98.51வீதம் வசிப்பதனால் இவர்களின் எதிர்கால நலன் கருதி முன்பு குறிப்பிட்ட முடிவுகளை இம்மக்கள் மேற்கொள்ளலாம். எனவே கீழ்வரும் கணிப்பீடுகள் அம்பாறை தொகுதியை நீக்கியதன் பிற்பாடு உள்ள பிரதேசத்தை கருத்தில் கொண்டதாக அமைகின்றது.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஏனைய மூன்று தேர்தல் தொகுதிகளையும் உள்ளடங்கிய பகுதியான பொத்துவில், சம்மாந்துறை, கல்முனையை இணைத்து கரையோர மாவட்டம் உருவாக்கப்பட்டு உத்தேச முஸ்லிம் பெரும்பான்மை மாகாணத்தின் மையமாக அமையும். இம்மாகாணத்தின் ஏனைய பிரதேசங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி, வாழைச்சேனை மற்றும் திருகோணமலையில் உள்ள கிண்ணியா, மூதூர், குச்சவெளி, தோப்பூர், புல்மோட்டை மற்றும் வன்னி மாவட்டத்தில் உள்ள விடத்தல் தீவு, முசலி, வேப்பங்குளம், பட்சனசசுர், எருகலம்பிட்டி, தாராபுரம், யாழ் நகரில் உள்ள முஸ்லிம் பிரதேசங்களை கொண்டதாக அமையும். இப்பிராந்தியத்தின் உத்தேச பரப்பு சுமார் 3871.9 ச.கி. யை கொண்டிருக்கும். வடக்கு, கிழக்கின் மொத்த நிலப்பரப்பில் 20.51வீதம் உடையதாக அமையும். சுமார் 771,551 பேர் இப்பிரதேசத்தில் அங்கம் வகிப்பர். வடகிழக்கின் மொத்த சனத்தொகையில் 29.48 வீதமானவர்களாவர். முஸ்லிம்கள் 68.53 வீதமும் தமிழர்கள் 18.38வீதமும் சிங்களவர்கள் 10.49வீதமாக காணப்படுவர்.
ஏனைய பிரதேசங்கள் ஒன்றிணைக்கப்பட்ட வடகிழக்காக அமையும். இதில் சுமார் 1,663,457 பேர் குடியுரிமையாளராவர். இது மொத்த வடகிழக்கு சனத்தொகையில் 63.57வீதம். இவர்களுக்கு 12860 ச.கி. அதாவது வடகிழக்கின் மொத்த நிலப்பரப்பில் 68.11வீதம் வழங்கப்படும்.
tlf;F khfhzk;
2012 |
tlf;F khfhzk;
1981 |
tlf;F khfhzk; 1971 | |
nkhj;j rdj;njhif | 1061315 | 1201605 | 704350 |
100% | 100% | 100% | |
rpq;fstu; | 30290 | 24986 | 18210 |
2.85% | 2.08% | 2.59% | |
jkpou; | 789046 | 937735 | 585418 |
74.35% | 78.04% | 83.11% | |
,];yhkpau; | 33427 | 55426 | 15520 |
3.15% | 4.61% | 2.20% | |
Nuhkd; fpW];jtu; | 164320 | 173244 | 77220 |
15.48% | 14.42% | 10.96% | |
Vida fpW];jtu; | 43899 | 9144 | 7811 |
4.14% | 0.76% | 1.11% | |
Vidatu; | 333 | 331 | 171 |
0.03% | 0.03% | 0.02% | |
nkgj;jg; gug;G (r. fp.) | 8884.00 | ||
fpuhk Nrtfu; gpupT | 921 |