குளிர்ச்சியும் ஆரோக்கியமும் தரும் வெள்ளரிக்காய்!

உடலை குளிர்விக்கும் அற்புத ஆற்றலை கொண்ட வெள்ளரிக்காயில் அதிகளவு நீர்சத்து உள்ளதால் நாவறட்சியை போக்கும் தன்மை கொண்டது. உடல் உறுப்புகளான ஈரல், கல்லீரல் போன்றவற்றின் வெப்பத்தையும் போக்கும் ஆற்றல் வெள்ளரிக்காயில் உள்ளதால் கோடையின் சூட்டை தவிர்க்கும் நண்பனான திகழ்கிறது வெள்ளரிக்காய்.

cucumber-elinaco-fresh-fruit

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் தோன்றிய வெள்ளரிக்காய் ஆயிரம் வருடங்களுக்கு முன் தான் உலகநாடுகளுக்கு பயணம் செய்தது. ஆயினும் இன்று உலகளவில் பலரகமாய் வெள்ளரிக்காய் உலா வருகிறது. இங்கிலீஷ் வெள்ளரிக்காய், லெபனி வெள்ளரிக்காய், தோசைக்காய், ஆப்பிள் வெள்ளரிக்காய், எகக்ரி, மஞ்சன் வெள்ளரிக்காய் என்றவாறு உலாவரும் வெள்ளரிக்காய் எங்கும், எந்நேரமும் சாப்பிட ஏற்றது.

விஞ்ஞானிகள் வெள்ளரிக்காயை பழ வகையில் சேர்த்துள்ளனர். ஆனால் மஞ்சள் காய்கறி அணிவரிசையில் சேர்த்துள்ளனர். இன்னும் கிராமபுறங்களில் மிகப்பெரிய வெள்ளரி பழங்கள் கோடைகாலத்தில் தாகம் தீர்க்கும் விதமாய் விற்பனைக்கு வருகின்றன. அவற்றின் சுவையும், புத்துணர்வும் அலாதி.

வெள்ளரிக்காயின் அற்புத குணங்கள்:

வெள்ளரிக்காயில் ஏதும் வைட்டமின்கள் இல்லை. ஆனால் தாது பொருட்களான சோடியம், பாஸ்பரஸ், இரும்பு, மக்னீசியம், கால்சியம், கந்தகம், சீலிசன், குளோரின் என்ற அணிவரிசையை வெள்ளரியில் அடக்கம்.

வெள்ளரிக்காய் 100 கிராமில் 18 கிராம்தான் கலோரி கிடைக்கும். வெள்ளரி பிஞ்சை அழுத்தும் போதும் திரிதோஷமும் போகும் என வைத்திய நூல்கள் கூறுகின்றன.

இரத்தத்தில் சிவப்பணுக்களை உருவாக்கும் பொட்டாசியம் மிகுதியாக உள்ளது. மூளைக்கு புத்துணர்வும், கபால சூட்டை தவிர்க்கவும் வெள்ளரிக்காய் உதவுகிறது. மூளைக்கு மிக சிறந்த வலிமையும் தருகிறது. சமீபத்திய ஆய்வின்படி வெள்ளரிக்காய் உண்ணும்போது பசி ரசம் என்ற கீரண நீர் அரக்கிறது. இது செரிமானத்தை அதிகரித்து பசியை தூண்டும் தன்மை கொண்டதாம்.

பித்தம் சார்ந்த நோய்களான பித்த வாந்தி, பித்தநீர், தலைசுற்றல் உள்ளவர்கள் வெள்ளரிக்காயை உண்ணலாம்.

நீரிழிவு நோயாளிகள் வெள்ளரிக்காயை, வெள்ளரி விதைகளை உண்ணும்போது அந்நோய் மட்டுபடும். வெள்ளரிக்காய் சிறுநீரகத்தை பாதுகாத்து, சிறுநீரக பிரச்சினைகளை தீர்க்கவல்லது.

சமைக்க வேண்டாம்-பச்சையாகவே சாப்பிடலாம்:

வெள்ளரிக்காயை பெரும்பாலும் அனைத்து தரப்பினரும் பச்சையாகதான் சாப்பிடுகிறார்கள். அதன் சுவையும், ருசியும் அலாதியானது. வெள்ளரிக்காய் கோடைகாலத்தில் உடல் சூட்டை தவிர்க்க உதவுவது எனினும் அனைத்து பருவங்களிலும் சுலபமாக கிடைக்கின்ற காய்கறி.

வெள்ளரிக்காயை சமைத்து சாப்பிடும்போது அதில் உள்ள பாஸ்பரஸ், பொட்டாசிய உப்புகள் அழிந்து விடும். எனவேதான் வெள்ளரி ஜீஸ், வெள்ளரி சாலட், என்றவாறு சமைக்காத உணவுகளாய் பெரும்பாலும் உண்கின்றனர்.